அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அதிமுக - பாஜக கூட்டணி முறிந்தது ஏன்? - நிர்மலா சீதாராமன் அறிக்கை தாக்கல்

அதிமுக - பாஜக கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளது குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக மேலிடத்திற்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :30 செப்டம்பர் 2023, 10:30 am

DIN

அதிமுக - பாஜக கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளது குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக மேலிடத்திற்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

அதிமுக - பாஜக இடையே மோதல் போக்கு இருந்து வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அறிவித்தது. இனி பாஜகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்றே அதிமுகவினர் கூறி வருகின்றனர். 

ஆனால், அதிமுகவுடன் இன்னும் பேச்சுவார்த்தையில் இருப்பதாக பாஜகவினர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது குறித்து பாஜக தலைமை கூறியதற்கு இணங்க, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளார். 

அதிமுக கூட்டணி முறிவு குறித்து தமிழக பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு அறிக்கை தயார் செய்துள்ளார். 

கூட்டணி முறிவு ஏன் ஏற்பட்டது? அதிமுக பிரிந்து செல்வதினால் பாஜகவுக்கு இழப்பு ஏற்படுமா? அதிமுக இன்றி வலுவான கூட்டணி அமையுமா? உள்ளிட்டவை குறித்து அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்த அறிக்கையை பாஜக தலைமையிடம் நிர்மலா சீதாராமன் இன்று சமர்ப்பித்துள்ளார். 

ஏற்கெனவே அதிமுக கூட்டணி முறிவு மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்துப் பேசுவதற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நாளை(அக். 1) தில்லி செல்லவிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தொடர்ந்து, வருகிற அக்டோபர் 3 ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் தமிழக பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.