மகாத்மா ஒருபுறம், கோட்சே மறுபுறம் - ராகுல் காந்தி பேச்சு

மகாத்மா காந்தி ஒருபுறம், கோட்சே மறுபுறம் என காங்கிரஸ் - பாஜகவுக்கு இடையேயான சித்தாந்தம் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

மகாத்மா காந்தி ஒருபுறம், கோட்சே மறுபுறம் என காங்கிரஸ் - பாஜகவுக்கு இடையேயான சித்தாந்தம் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார். 

மத்திய பிரதேச மாநிலம் ஷஜாப்பூர் பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ராகுல் காந்தி, 'இது சித்தாந்தங்களுக்கு இடையேயான போர். ஒரு பக்கம் காங்கிரஸ் கட்சி, மறுபுறம் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக. மகாத்மா காந்தி ஒருபுறம், கோட்சே ஒருபுறம். அதுபோல காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு இடையேயான போர் என்பது வெறுப்புக்கும், அன்பு மற்றும் சகோதரத்துவத்துக்கும் இடையிலான போர். 

அவர்கள்(பாஜக) எங்கு சென்றாலும் வெறுப்பைப் பரப்புகிறார்கள். இப்போது மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் மீது வெறுப்பைக் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள். மக்களிடம் அவர்கள் வெறுப்பைக் காட்டியதால் அதனையே திரும்பப் பெறுகிறார்கள். 

ஒற்றுமை நடைப்பயணத்தின்போது மத்திய பிரதேசத்தில் பல விவசாயிகளைச் சந்தித்தேன். பெண்கள் மற்றும் இளைஞர்களை சந்தித்துப் பேசினேன். அவர்கள் என்னிடம் சில விஷயங்களைச் சொன்னார்கள். நாட்டில் எங்கும் செய்யாத அளவுக்கு மத்திய பிரதேசத்தில் பாஜக ஊழல் செய்துள்ளது. 

மேலும் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பயிர்களுக்கு உரிய விலையைப் பெறவில்லை. சத்தீஸ்கரில் அரிசிக்கு ரூ. 2,500 கொடுக்கிறோம். நாங்கள் வாக்குறுதி அளித்ததை நிறைவேற்றியிருக்கிறோம். 

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்' என்று பேசியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com