6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று சில பணிகளைச் செய்யலாம்! எவை?

தேர்தல் ஆணையத்தின் முன்அனுமதி பெற்று சில பணிகளைச் செய்யலாம் என தேர்தல் நடத்தை விதிமுறைகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
செய்தியாளர் சந்திப்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்- படம் - பிடிஐ
Updated On :15 மார்ச் 2026, 2:10 pm

இணையதளச் செய்திப் பிரிவு

தேர்தல் ஆணையத்தின் முன் அனுமதி பெற்று சில பணிகளைச் செய்யலாம் என தேர்தல் நடத்தை விதிமுறைகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. மே 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதேபோன்று புதுச்சேரி, கேரளம், அசாம் மாநிலங்களுக்கு ஏப்ரல் 9 ஆம் தேதியும், மேற்கு வங்கத்திற்கு ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய இரு தேதிகளில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துள்ளன. இதன்படி அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றப்பட வேண்டும், விளம்பரங்களில் கட்டுப்பாடு உள்ளிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

எனினும் தேர்தல் ஆணையத்தின் முன் அனுமதி பெற்று சிலப் பணிகளைத் தொடரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவை:

எந்தவொரு விருப்ப அதிகார நிதியிலிருந்தும் (Discretionary funds) புதிய பணிகளையோ திட்டங்களையோ தொடங்குதல்.

தற்போதுள்ள திட்டங்களின் செயல்பாட்டுப் பகுதியை விரிவுபடுத்துதல்.

தனிநபருக்கோ அல்லது நிறுவனங்களுக்கோ அரசு நிலம் ஒதுக்கீடு செய்தல்.

சர்வதேச டெண்டர்கள் தவிர்த்து, ஏற்கெனவே விடப்பட்ட மற்ற டெண்டர்களை இறுதி செய்தல் (மதிப்பீடு செய்யலாம், ஆனால் இறுதி செய்யக்கூடாது). டெண்டர்கள் இதுவரை விடப்படவில்லை எனில், அனுமதி இன்றி வெளியிடக்கூடாது.

ஏற்கனவே உள்ள தினக்கூலி அல்லது நிவாரண விகிதங்களில் மாற்றங்கள் செய்தல்.

இயற்கை பேரிடர்களைத் தடுக்க மேற்கொள்ளப்படும் புதிய தடுப்பு நடவடிக்கைகள் (உதாரணமாக: அணைக் கரைகளை சரி செய்தல்).

ஒரு பகுதியை வறட்சி அல்லது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவித்தல்.

விதிவிலக்கான சூழலில் (வறட்சி பாதித்த பகுதிகளில்) குடிநீர் லாரிகள் மூலம் நீர் வழங்குதல், புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தல் மற்றும் கால்நடைகளுக்குத் தீவனம் வழங்குதல் போன்ற பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் - முழு விவரம், இங்கே கிளிக் செய்யவும்

PDF
தேர்தல் நடத்தை விதி முறைகள் அரசு அலுவலர்களுக்கான வழிகாட்டுதல்கள்
பார்க்க

summary

Tn election 2026 Election code of conduct Certain tasks can be carried out with the permission of the Election Commission.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.