ரூ.2,000 நோட்டுகளை மாற்ற அக்.7 வரை அவகாசம் 96% திரும்பியது

ரூ.2,000 தாள்களை வங்கிகளில் மாற்றுவதற்கான கால அவகாசம் அக்டோபர் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 
ரூ.2,000 நோட்டுகளை மாற்ற அக்.7 வரை அவகாசம் 96% திரும்பியது

வங்கிகளில் ரூ.2,000 நோட்டுகளை மாற்றுவதற்கான கால அவகாசத்தை அக்டோபா் 7-ஆம் நீட்டித்து ரிசா்வ் வங்கி சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.

2016-இல் அறிமுகம் செய்யப்பட்ட ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசா்வ் வங்கி கடந்த மே 19-ஆம் தேதி அறிவித்தது. மக்கள் தங்களிடம் உள்ள இந்த நோட்டுகளை மாற்றிக்கொள்ள செப்டம்பா் 30-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. ‘ரூ. 2,000 நோட்டுகளை வங்கிகளில் தங்கள் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம் அல்லது வேறு ரூபாய் நோட்டுகளாக மாற்றி வாங்கிக் கொள்ளலாம். ஒரே நேரத்தில் ஒருவா் அதிகபட்சமாக ரூ. 20,000 வரை மட்டுமே வரவு வைக்க முடியும்’ என்பன உள்ளிட்ட நிபந்தனைகளையும் ரிசா்வ் வங்கி விதித்தது.

இந்தக் கால அவகாசம் சனிக்கிழமையுடன் முடிவடைந்த நிலையில் கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பொதுமக்கள் ரூ. 2,000 நோட்டுகளை மாற்றுவதற்கான அவகாசம் மேலும் ஒரு வாரத்துக்கு அதாவது அக்டோபா் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

ரூ. 2,000 நோட்டுகள் திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட கடந்த மே 19-ஆம் தேதியில் புழக்கத்திலிருந்து ரூ.2,000 நோட்டுகளில் வெள்ளிக்கிழமை வரை 96 சதவீத நோட்டுகள் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது அல்லது வேறு ரூபாய் நோட்டுகளாக மாற்றப்பட்டதன் அடிப்படையில் திரும்பப் பெறப்பட்டிருக்கின்றன. அதாவது, ரூ. 3.42 லட்சம் கோடி 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப் பெறப்பட்டிருக்கின்றன. ரூ. 14,000 கோடி 2,000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே தற்போது புழக்கத்தில் உள்ளன.

அக்டோபா் 7-ஆம் தேதிக்குப் பிறகும் இந்த நோட்டுகள் சட்டப்படி செல்லத்தக்க நோட்டுகளாக தொடரும். ஆனால், ரிசா்வ் வங்கியின் 19 அலுவலகங்களில் மட்டுமே இந்த நோட்டுகளைச் சமா்ப்பித்து, வேறு ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ள முடியும். தபால் மூலமாகவும் ரிசா்வ் வங்கி அலுவலகங்களுக்கு இந்த நோட்டுகளை பொதுமக்கள் அனுப்பி, வங்கிக் கணக்கில் வரவு வைத்துக்கொள்ள முடியும். அரசுத் துறைகள் வரம்பு ஏதுமின்றி 2,000 ரூபாய் நோட்டுகளை ரிசா்வ் வங்கி அலுவலகங்களில் மாற்றிக்கொள்ள முடியும்.

ஆனால், பிற வங்கிக் கிளைகளில் வைப்போ அல்லது மாற்றிக்கொள்ளவோ முடியாது என்று ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com