தேசிய நெடுஞ்சாலை பள்ளங்களுக்கு இனி இவர்கள்தான் பொறுப்பு!

பள்ளங்கள் இல்லாத தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அரசு நெடுஞ்சாலை பொறியாளர்களே இனி பொறுப்பேற்க வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கோப்புப் படம்..
கோப்புப் படம்..


புது தில்லி: பள்ளங்கள் இல்லாத தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அரசு நெடுஞ்சாலை பொறியாளர்களே இனி பொறுப்பேற்க வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பள்ளங்களை சரி செய்யுமாறும் மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒவ்வொரு திட்ட இயக்குநர்களும், அனைத்து சாலைகளையும் 15 நாள்களுக்கு ஒரு முறை நேரில் சென்று பார்வையிட்டு, பள்ளங்கள் இல்லாத சாலைகளாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, நாடு முழுவதும் உள்ள 1.46 லட்சம் கிலோ மீட்டர் தொலைவு கொண்ட தேசிய நெடுஞ்சாலையானது குறிப்பிட்ட பராமரிப்பு ஒப்பந்தத்தின் கீழ் கொண்டு வரப்படும்.  அந்த வகையில், புதிதாக ஒப்பந்தங்களை விடுக்கும்போது, அதில், சாலை பராமரிப்புக்கான குறிப்பிட்ட விதிமுறைகளும் உருவாக்கப்படும் என்று கூறப்படுகிறது.

கடந்த 2021ஆம் ஆண்டில் மட்டும் 3,625 சாலை விபத்துகளில் 1,481 பேர் பலியாகியுள்ளனர். 3,064 பேர் காயமடைந்துள்ளனர். இதுமட்டுமல்லாமல், நெடுங்சாலைகளில் இருக்கும் பள்ளங்கள், வாகனங்களின் வேகத்தையும் கட்டுப்படுத்திவிடுகின்றன.

தேசிய நெடுஞ்சாலைகளில் மழையால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய புதிய விதிமுறை வகுக்கப்படும். பொறியியல் மாணவர்களைக் கொண்டு  சாலைகளில் ஏற்படும் பள்ளங்களை கண்டறியவும் அதனை உடனுக்குடன் சரி செய்யவும் தேவையான தொழில்நுட்பங்களைக் கொண்டு வர ஊக்குவிக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com