12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு 45 மணி நேரம் காத்திருப்பு!

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பக்தர்கள் இலவச தரிசனத்திற்காக 45 மணி நேரம் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

திருமலைக்கு வருவோர் பயணத்தை தள்ளி வைக்க தேவஸ்தானம் வேண்டுகோள்

Published On :

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பக்தர்கள் இலவச தரிசனத்திற்காக 45 மணி நேரம் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமை என்பதால் திருப்பதி மலையில் பக்தர்களின் கூட்டம் வெகுவாக அதிகரித்து வருகின்றது. பள்ளிகளுக்கு தற்போது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்யவரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

வைகுண்டம் பியூ காம்ப்ளக்சில் இருந்து நேரடியாக இலவச தரிசனத்தில் செல்லும் சாதாரண பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 45 மணி நேரம் ஆகிறது. கூட்டம் நிரம்பி வழிவதால் சுமார் 7 கி.மீட்டர் நீள வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். 

இந்த நிலையில் கோயிலில் விஐபி தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதால் நேற்று பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அலைமோதியது. இலவச தரிசனத்திற்கு டோக்கன் கிடைக்காத பக்தர்கள் திருப்பதி மலையில் உள்ள மண்டபங்களில் அவரவர் குடும்பங்களோடு தங்கியுள்ளனர். 

வாகன நிறுத்துமிடமும் நிரம்பி வழியும் நிலையில் இன்னும் 2 நாள்களுக்குக் கூட்டம் குறையாது எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

திருப்பதியில் தங்கும் அறைகளும் நிரம்பியுள்ளதால் பக்தர்கள் தங்குவதற்கு இடமின்றி தவித்து வருகின்றனர். திருமலையில் கூடியுள்ள பக்தர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகளைத் தேவஸ்தான நிர்வாகம் செய்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.