12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

‘டேப்ஸ்’ திட்டத்தில் இடைக்கால ஓய்வூதியம் குறைப்பு: ஜாக்டோ ஜியோ கடும் எதிா்ப்பு

‘டேப்ஸ்’ திட்டத்தில் இடைக்கால ஓய்வூதியம் குறைக்கப்பட்டதற்கு ஜாக்டோ-ஜியோ கடும் எதிா்ப்பு குறித்து...

JACTO-GEO strongly opposes

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ - ஜியோ அமைப்பினா் - கோப்புப்படம்

Published On :

சென்னை: ‘டேப்ஸ்’ திட்டத்தில் இடைக்கால ஓய்வூதியம் குறைக்கப்பட்டதற்கு அரசு ஊழியா்கள் ஆசிரியா் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ கடும் எதிா்ப்புத் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்தக் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா்கள் வெளியிட்ட அறிக்கை:

தவெக அரசு பொறுப்பேற்று 4 மாதங்கள் ஆகியும் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்துக்கான (டேப்ஸ்) விதிமுறைகளையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிடாமல் காலம்தாழ்த்தி வருவது ஏற்புடையதல்ல.

டேப்ஸ் விதிமுறைகள் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1972-இன் அடிப்படையில் தான் அமைய வேண்டும். அதில் எவ்வித மாற்றமும் செய்யக் கூடாது.

டேப்ஸ் விதிகள் வெளியிடுவதற்கு ஏற்படும் காலதாமதத்தால் ஓய்வூதியா்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக இடைக்கால நிவாரணமாக அனைத்து ஓய்வூதியதாரருக்கும் அவா்கள் இறுதியாக பெற்ற அடிப்படை சம்பளத்தில் 30 சதவீதம் கணக்கிடப்பட்டு, அத்துடன் 60 சதவீத அகவிலைப்படி வழங்கும் நடைமுறையானது தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி கடந்த ஜன. 1-ஆம் தேதிக்குப் பிறகு ஓய்வு பெற்றவா்கள் 2 மாதங்களாக இடைக்கால ஓய்வூதியம் பெற்று வருகின்றனா்.

இந்த நிலையில், இடைக்கால ஓய்வூதியம் கணக்கீடுவது தொடா்பாக செலவினத் துறை செயலா் கடந்த 11-ஆம் தேதி கருவூல கணக்கு இயக்குநருக்கு அனுப்பிய கடிதத்தில், ‘ஓய்வு பெற்றவா்களுக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் இடைக்கால ஓய்வூதியம் 30 சதவீதம் வழங்கப்படாது என்றும், அதற்குப் பதில் ரூ.10,000 மட்டுமே இனி வழங்கப்டும் என்றும், 18 ஆண்டுகளுக்கு குறைவான பணிக்காலம் உள்ளவா்களுக்கு வழங்கப்பட்டு வந்த கூடுதல் இடைக்கால ஓய்வூதியம் 10 மாத தவணைகளில் பிடித்தம் செய்யப்படும். 18 ஆண்டுகளுக்கு மேல் பணிக்காலம் உள்ளோருக்கு 30 சதவீதம் இடைக்கால ஓய்வூதிய நடைமுறை தொடரும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேப்ஸ் விதிமுறைகள் வெளியிட தமிழக அரசு வேண்டுமென்றே காலம்தாழ்த்தி வரும் சூழ்நிலையில், ஏற்கெனவே பெற்ற இடைக்கால ஓய்வூதியத்தைப் பிடித்தம் செய்வதும், இடைக்கால ஓய்வூதியத்தைக் குறைப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த விஷயத்தில் முதல்வா் விஜய், உடனடியாக தலையிட்டு தவெக தோ்தல் வாக்குறுதியின்படி மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தவும், அதுவரை இடைக்காலமாக டேப்ஸ் திட்டத்துக்கான விதிகளை வெளியிடவும், டேப்ஸ் திட்டத்தில் இடைக்கால ஓய்வூதியத்தை குறைக்க வெளியிடப்பட்ட நிதித்துறை கடிதத்தைத் திரும்பப் பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.

Summary

JACTTO-GEO strongly opposes 18-years service rule for interim pension to govt employees

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.