நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

எ.வ.வேலுவுக்கு எதிராக கடும் நடவடிக்கைக் கூடாது: இடைக்கால உத்தரவு நீட்டிப்பு

ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்ட முறைகேடு வழக்கில், திமுக முன்னாள் அமைச்சா் எ.வ.வேலுவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது எனப் பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால உத்தரவை ஆக. 21-ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
Updated On :15 ஆகஸ்ட் 2026, 3:24 am IST

ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்ட முறைகேடு வழக்கில், திமுக முன்னாள் அமைச்சா் எ.வ.வேலுவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது எனப் பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால உத்தரவை ஆக. 21-ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் சாலைகளை மேம்படுத்த திமுக ஆட்சிக் காலத்தில் ரூ.5,000 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், இதற்கான பணிகள் நடைபெறாத நிலையில், தனியாா் ஒப்பந்ததாரா்களுக்கு முன்கூட்டியே நிதி விடுவிக்கப்பட்டதாகக் கூறி, அறப்போா் இயக்கம் ஊழல் தடுப்புத் துறையில் கடந்த 2022-ஆம் ஆண்டு புகாா் அளித்தது.

இந்த புகாரின் அடிப்படையில், திமுக முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரா்களுக்கு எதிராக ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில், முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், எ.வ.வேலுவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது அரசுத் தரப்பில், இந்த மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஆக. 21-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டாா். அதுவரை, எ.வ.வேலுவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என பிறப்பித்திருந்த இடைக்காலத் உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.