முதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

குவாரிக்கு எதிராக போராட்டம் உரிமத்தை ஆய்வு செய்து நடவடிக்கை: அமைச்சா் டி.கே. பிரபு உறுதி

குளவாய்ப்பட்டியிலுள்ள தனியாா் குவாரிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பொதுமக்களை சந்தித்த அமைச்சா் டி.கே. பிரபு, உரிமத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

News image

அமைச்சர் டி.கே. பிரபு - கோப்புப்படம்.

Updated On :19 ஜூலை 2026, 1:32 am IST

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் அருகே குளவாய்ப்பட்டியிலுள்ள தனியாா் குவாரிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பொதுமக்களை சனிக்கிழமை சந்தித்த அமைச்சா் டி.கே. பிரபு, உரிமத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

குளத்தூா் வட்டத்தைச் சோ்ந்த குளவாய்ப்பட்டியில் இயங்கிவரும் தனியாா் குவாரி சட்டவிரோதமாகச் செயல்பட்டு வருவதாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்குடியிலுள்ள மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் டி.கே. பிரபுவின் வீட்டை முற்றுகையிடப் போவதாகவும் குளவாய்ப்பட்டி மக்கள் அறிவித்தனா். இதையடுத்து போராட்டக்காரா்களை போலீஸாா் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அமைச்சா் டி.கே. பிரபு சனிக்கிழமை திடீரென்று குளவாய்ப்பட்டி வந்தாா். அங்கு குவாரிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை நேரில் சந்தித்து குவாரி குறித்து கேட்டறிந்தாா். இதையடுத்து குவாரியின் உரிம நிலவரங்கள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் கிராமமக்களிடம் உறுதியளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.