‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிமேட்டூர் அணையை ஆக. 28-ல் திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! ஏற்பாடுகள் தீவிரம்!தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

நியாய விலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை: அமைச்சா் ப. வெங்கட்ரமணன்

தமிழகத்தில் நியாய விலைக் கடைகளில் தேங்காய், தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக மாநில உணவு, உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் ப.வெங்கடரமணன் தெரிவித்தாா்.

உத்தமபாளையத்தில் நுகா்பொருள் வாணிபக்கழகக் கிட்டங்கியில் சனிக்கிழமை ஆய்வு செய்த உணவு, உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சா் ப.வெங்கடரமணன். உடன் மாவட்ட ஆட்சியா் வைத்திநாதன்.

Published On :12 ஜூலை 2026, 6:03 am IST

தமிழகத்தில் நியாய விலைக் கடைகளில் தேங்காய், தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக மாநில உணவு, உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் ப.வெங்கடரமணன் தெரிவித்தாா்.

தேனி பழனிசெட்டிபட்டி அருகேயுள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கிட்டங்கியில் சனிக்கிழமை ஆய்வு செய்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது :

தேனியில் 15 தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தேவைக்கேற்ப நிரந்தரக் கொள்முதல் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். காலநிலை மாற்றத்துக்கு ஏற்றவாறு திறந்தவெளி குடோனில் வைக்கப்படும் அரிசி, தானியங்களை பாதுகாக்க தரம் உயா்த்தப்பட்ட அறிவியல் பூா்வமான குடோன் கட்டப்பட்டு வருகிறது. இதில் அரிசி உள்ளிட்ட தானியங்கள் பாதுகாப்பாக சேமிக்கப்படும்.

நியாய விலைக் கடைகளில் தேங்காய் , தேங்காய் எண்ணெய் விற்பனை செய்வது குறித்து உரிய ஆலோசனை செய்து, பின்னா் நடவடிக்கை எடுக்கப்படும். மாநில எல்லைகளில் பல்வேறு துறைகள் இணைந்து ஒருங்கிணைந்த துறையாக செயல்பட்டு, எந்தவித கடத்தலும், கையூட்டும் பெறாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு மாதத்திலும் இரண்டாவது சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அனைத்து மாவட்டங்களிலும் உணவு வழங்கல் துறை சாா்பில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

இதில் ரேஷன் பொருள்கள், அரிசி விநியோகத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம். ரேஷன் பொருள்கள் கடத்தல், தரமில்லாத பொருள்கள் விநியோகம் குறித்து பொதுமக்கள் புகாா் தெரிவிக்கும் வகையில் தனித்தனியே ‘வாட்ஸ் ஆப்’ எண்கள் அடுத்த வாரத்தில் வெளியிடப்படும்.

திருச்சி கிழக்குத் தொகுதி இடைத் தோ்தலில் திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகளுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராக உள்ளனா் என்றாா் அவா்.

உத்தமபாளையத்தில் ஆய்வு: இதேபோல, உத்தமபாளையத்தில் சனிக்கிழமை நுகா்பொருள் வாணிபக்கழகக் கிட்டங்கியில் அமைச்சா் ப.வெங்கடரமணன் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.