லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பெட்ரோல், டீசல் விலைகள் தாறுமாறாகக் குறையுமா? கச்சா எண்ணெய் விலையில் மாற்றம்

கச்சா எண்ணெய் விலையை சௌதி அரேபியா குறைத்திருப்பதால் பெட்ரோல், டீசல் விலைகள் தாறுமாறாகக் குறையுமா? என்பது பற்றி

பெட்ரோல், டீசல் விலைகள் (கோப்புப்படம்)

பெட்ரோல், டீசல்

Published On :7 ஜூலை 2026, 6:12 pm IST

6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, சௌதி அரேபியாவின் அராப் லைட் நிறுவனம், ஆசியாவுக்கு வழங்கப்படும் கச்சா எண்ணெய் விலையை ஆகஸ்ட் மாதத்தில் பேரலுக்கு 1.50 டாலர்கள் குறைத்து விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது. இது ஓமன் மற்றும் துபையின் சராசரி விலையை விடக் குறைவு.

கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்குப் பிறகு, இந்த அளவுக்கு விலைக் குறைப்பு என்பது தற்போதுதான் நடக்கிறது என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன.

சௌதி அரேபியாவின் பொதுத் துறை எண்ணெய் நிறுவனமான சௌதி ஆரம்கோ, கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத வகையில், ஆகஸ்ட் மாதத்தில், ஆசியாவிலிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்பவர்களுக்கு மிகப்பெரிய விலைக் குறைப்பை அறிவித்துள்ளது. இது கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத விலைக் குறைப்பு என்றும் கூறப்படுகிறது.

சௌதி ஆரம்கோ நிறுவனத்தில், ஆசிய எண்ணெய் நிறுவனங்களுக்காகத் தொடங்கப்பட்டிருக்கும் அராப் லைட் நிறுவனம், தன்னுடைய அதிகாரப்பூர்வ விற்பனை விலையில், ஒரு பேரலுக்கு 11 டாலர் வரை குறைத்து நிர்ணயம் செய்துள்ளது. ஓமன் நாட்டுக்கான கச்சா எண்ணெய் விலை தள்ளுபடியுடன் ஒப்பிட்டால் 1.50 டாலர்கள் சலுகை விலையில் ஆசிய நாடுகளுக்குக் கிடைக்கும் வகையில் இந்த விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டுக்குப் பிறகு, முதல் முறையாக இந்த விலைக் குறைப்பு நடந்திருப்பதாகவும், இதுபோல, வடமேற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளுக்கும் சௌதி ஆரம்கோ கச்சா எண்ணெய் விலைக் குறைப்பை மேற்கொள்ளவிருப்பதாகக் கூறப்படுகிறது.

சீனா உள்பட ஆசிய நாடுகளிலிருந்து, கச்சா எண்ணெய் கொள்முதல் குறைந்து வருவதன் எதிரொலியாகவே, கச்சா எண்ணெய் விலைகளை குறைக்கும் முடிவை சௌதி அரேபியா எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

விரைவில், கச்சா எண்ணெய் விலை மேலும் குறைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த கச்சா எண்ணெய் விலைக் குறைப்பின் பலன்கள், மக்களைச் சென்றடையுமா அல்லது நஷ்டக் கணக்கைக் காட்டி பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களே எடுத்துக் கொள்ளுமா என்பதே மக்களின் கேள்வி.

Summary

Will petrol and diesel prices drop drastically? Changes in crude oil prices.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.