ஈரான் போர் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட நிலையில், இந்தியாவில் உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலை குறையுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அணுஆயுதக் கொள்கைகளைக் கைவிடக் கோரி கடந்த பிப்.28 ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய ராணுவப்படைகள் நடத்திய கொடூரத்தாக்குதலில் ஈரானின் மதகுரு அலி அயத்துல்லா கமேனி கொல்லப்பட்டார்.
அந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து, இருதரப்புக்கும் இடையே போர் தொடங்கியது. இந்தப் போரில், வளைகுடா நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டதுடன், எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டது.
ஹோர்முஸ் நீரிணையை மூடியதன் விளைவாக, கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டு, இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட அதிகளவிலான மக்கள்தொகை கொண்ட நாடுகளில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு உருவானது. இதனால், பெட்ரோல், டீசல், சிஎன்ஜி விலை அதிகரித்தது.
இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் பங்கேற்ற அதிபர் டிரம்ப் கடந்த புதன்கிழமை (ஜூன் 17) ஈரான் உடனான அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதையடுத்து, அந்த ஒப்பந்தத்தில் ஈரானிய அதிபர் மசூத் பெஷேஷ்கியனும் கையெழுத்திட்டதாக, ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்த அமைதி ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக, இந்தியாவில் பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருள்களின் விலை குறையுமா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
உலகின் எண்ணெய் வர்த்தகத்தில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு வகிக்கும் ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, எல்பிஜி சிலிண்டர்களின் விலை அதிகரிப்பு, விமான டிக்கெட் கட்டணங்கள் மற்றும் பணவீக்கம் உள்ளிட்ட கவலைகள் எழுந்தன. போர் அமைதி ஒப்பந்தத்தால், மீண்டும் ஹோர்மூஸ் நீரிணை திறக்கப்பட்டுள்ளதால், பெட்ரோல், டீசல் விலை குறையுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
கடந்த மூன்று மாதங்களில் இல்லாத வகையில், 100 டாலருக்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் சுமார் 77-78 டாலராக சரிந்துள்ளது.
இதனால், இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை நிறுவனங்கள் கணிசமான அளவில் குறைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
When United States and Iran announced the signing of a peace deal after months of a bloody conflict, the question on everyone’s mind in India was not hard to guess—will our fuel prices come down?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கச்சா எண்ணெய் விலை 5% சரிவு! பெட்ரோல், டீசல் விலை குறையுமா?

மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு! அலறும் வாகன ஓட்டிகள்..!
பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயா்வு! 9 நாள்களில் லிட்டருக்கு ரூ. 5 அதிகரிப்பு!
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK

மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள், விமர்சனங்கள்! ஆளுநர் உரை | TN assembly | Governor speech


