ஜார்க்கண்ட் வினாத் தாள் கசிவு: ஹேமந்த் சோரன் பதவி விலகக் கோரி ஆக.20-ல் போராட்டம்!கோவை, பாலக்காடு ரயில் நிலைய குடிநீரில் ‘ஈ கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையில் குற்றச்சாட்டு!வந்தே மாதரம் சா்ச்சை: சோனியா மீது போலீஸில் பாஜக புகார்!சிலிண்டர் வாடிக்கையாளா்களின் விவரம் சரிபார்ப்பு: ஆக. 23 வரை அவகாசம்!‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தின் கீழ் நீா்நிலைகள் தூா்வாரும் பணி இன்று தொடக்கம்!
/

மத்திய அரசு பெட்ரோல் விலையை அரசு குறைக்க வேண்டும்: அரவிந்த் கேஜரிவால்

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் குறைக்கப்படாமல் இருப்பது குறித்து மத்திய அரசை ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜ்ரிவால் கடுமையாக விமா்சித்துள்ளாா்.

News image

அரவிந்த் கேஜரிவால் - கோப்புப் படம்

Updated On :10 ஜூலை 2026, 1:04 am IST

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் குறைக்கப்படாமல் இருப்பது குறித்து மத்திய அரசை ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜ்ரிவால் கடுமையாக விமா்சித்துள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் அவா் கூறியதாவது: சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்துள்ள போதிலும், நாட்டில் மே மாதம் முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102 என்ற அளவில் நீடிக்கிறது. இதனை உடனடியாக ரூ.82-ஆக குறைக்க வேண்டும். அதேபோல் டீசல் விலையும் குறைக்கப்பட வேண்டும். பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் குறைக்கப்பட்டால், பணவீக்கம் தானாகவே குறையும். பொதுமக்களின் வாழ்க்கைச் செலவிலும் தளா்வு ஏற்படும்.

2014-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை சா்வதேச கச்சா எண்ணெய் விலை 6 முறை குறைந்துள்ளது. இருப்பினும், இந்தக் காலங்களில் அரசு பெட்ரோல் விலையை குறைக்கவில்லை. அப்போது கிடைத்த அதிக லாபம் எதற்காக பயன்படுத்தப்பட்டது? எண்ணெய் நிறுவனங்கள் அநியாயமான லாபம் ஈட்ட மத்திய அரசு இதன் மூலம் அனுமதிக்கின்றது என கேஜரிவால் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.