திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்தது நயாரா நிறுவனம்!

நயாரா நிறுவனம், பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்தது பற்றி....

News image

கோப்புப் படம் - ENS

Updated On :1 ஜூலை 2026, 11:48 am IST

இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் பதற்றம் தணிந்துள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலையை நயாரா நிறுவனம் குறைத்துள்ளது.

மேற்காசியாவில் ஈரான் - இஸ்ரேல், அமெரிக்க கூட்டுப் படைகள் இடையே நடைபெற்ற போரால் கச்சா எண்ணெய் வரத்து பாதிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவியது.

கச்சா எண்ணெய் பற்றாக்குறை மற்றும் விலை ஏற்றம் காரணமாக இந்தியாவில் முன்னணி எரிவாயு நிறுவனங்களில் ஒன்றான நயாரா நிறுவனம், பெட்ரோல், டீசல் விலையை கடந்த மார்ச் மாதம் உயர்த்தியது . அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தியது.

தற்போது மேற்காசியப் போர் பதற்றம் தணிந்துள்ள நிலையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதுடன் பெட்ரோல், டீசல், எரிவாயு விநியோகம் சீராகியுள்ளது.

இதனால் நயாரா நிறுவனம் பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்துள்ளது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5 -ம் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 3 -ம் குறைக்கப்பட்டுள்ளது. நயாரா நிறுவனத்தின் 7,000 பெட்ரோல் நிலையங்களில் இன்று முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளது .

Summary

Nayara Energy cuts petrol by Rs 5 per litre, diesel by Rs 3 as global oil rates down

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.