புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!எம்பாப்பே இரட்டை கோல்! ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிரான்ஸ்!வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்! பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! வீட்டு உபயோக சிலிண்டர் விலை?

வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 2026-ல் முதல் முறையாகக் குறைக்கப்பட்டுள்ளது தொடர்பாக...

News image

வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.172.50 குறைக்கப்பட்டு ரூ.3,106-க்கு விற்பனையாகிறது. - கோப்புப்படம்

Updated On :1 ஜூலை 2026, 8:41 am IST

வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 2026-ல் முதல் முறையாகக் குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும்,14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

மேற்கு ஆசியாவில் பதற்றம் தணிந்ததைத் தொடர்ந்து, இந்திய பெட்ரோலியம் நிறுவனங்கள் நாடு முழுவதும் 19 கிலோ எடையுள்ள வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர்களின் விலையைக் குறைத்துள்ளது; இது 2026-ல் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர்கள் விலையில் செய்யப்படும் முதல் குறைப்பு நடவடிக்கையாகும்.

சா்வதேச எரிபொருள் விலை மற்றும் அந்நியச் செலாவணி விகிதத்துக்கு ஏற்ப ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில், சமையல் எரிவாயு சிலிண்டா் மற்றும் விமான எரிபொருள் விலையை மத்திய அரசுக்குச் சொந்தமான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.

இந்த நிறுவனங்கள் 19 கிலோ எடைகொண்ட வணிக சமையல் எரிவாயு சிலிண்டா் விலையை புதன்கிழமை மாற்றியமைத்தன.

இதன்படி, சென்னையில் ஹோட்டல் மற்றும் உணவகங்களில் பயன்படுத்தப்படும் வணிக சிலிண்டா் விலை ரூ.172.50 குறைக்கப்பட்டு ரூ.3,106-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும், 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமுமின்றி ரூ.957.50-க்கு விற்பனையாகிறது.

தில்லியில் சிலிண்டரின் விலை ரூ. 183.50 குறைக்கப்பட்டு ரூ.2,930-க்கும், மும்பையில் ரூ.2,885.50-க்கும் விற்பனையாகிறது. வீட்டு உபயோக சிலிண்டா்களின் விலை மாற்றியமைக்கப்படவில்லை.

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

Summary

Commercial cylinder to cost Rs 183 cheaper in Delhi, no change domestic price In Delhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.