
கோப்புப் படம்
இந்தியாவில் இரண்டாவது ஆப்பிள் நிறுவனத்தின் பிரத்யேக விற்பனையகம்
இன்று தலைநகர் தில்லியில் திறக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் குக் இதனை திறந்து வைத்தார்.
இந்தியாவுடான 25 ஆண்டு வர்த்தகத்தை கொண்டாடும் விதமாக பிரத்யேக விற்பனையகத்தை ஆப்பிள் நிறுவனம் தொடங்கியுள்ளது. முன்னதாக ஏப்ரல் 18-ஆம் தேதி மும்பையில் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று புது தில்லியிலும் ஒரு விற்பனையகத்தை திறந்துள்ளது.
இந்த ஆப்பிள் விற்பனையகத்தில், பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை வழங்குவதற்கான அனைத்து விதமான நடவடிக்கைகளை ஆப்பிள் நிறுவனம் எடுத்துள்ளது.
தில்லியின் தெற்கு பகுதியில் திறக்கப்பட்ட இந்த விற்பனையகத்தில் 18 மாநிலங்களைச் சேர்ந்த 70 சில்லறை விற்பனை குழு உறுப்பினர்கள் இருப்பதாகவும், இவர்கள் பயனர்களுடன் 15 மொழிகளில் பேசுவார்கள் என்றும் கூறப்படுகிறது. மும்பையில் திறக்கப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தை விட இது சிறியது.
இந்தியாவில் இரண்டு விற்பனையகத்தை திறப்பது, ஐபோன் தயாரிப்பாளரிடமிருந்து இந்திய சந்தையை நோக்கிய மிகுதித்தனமையை குறிக்கிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...