கோப்புப்படம்
கோப்புப்படம்

வீட்டில் இருந்து வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.11 லட்சம் மோசடி

செக்டர் 85 குடியிருப்பாளரிடம் வீட்டிலிருந்து வேலை செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி ரூ.11 லட்சத்துக்கு மேல் மோசடி செய்ததாக போலிஸார் இன்று தெரிவித்தனர்.


குருகிராம்: செக்டர் 85 குடியிருப்பாளரிடம் வீட்டிலிருந்து வேலை செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி ரூ.11 லட்சத்துக்கு மேல் மோசடி செய்ததாக போலிஸார் இன்று தெரிவித்தனர்.

ஆக்ராவைச் சேர்ந்த பூஜா வர்மா என்பவர் காவல்துறையில் அளித்த புகாரில், பகுதி நேர அடிப்படையில் வீட்டிலிருந்து வேலை செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை வழங்குவதாக வாட்ஸ்அப்பில் ஒரு செய்தி வந்ததாக தெரிவித்துள்ளார். அதில் யூடியூப் சேனல்களுக்கு சந்தா செலுத்துவது உள்ளிட்ட பணிகள் அவருக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் டெலிகிராம் சேனலில் லிங்க் மூலம் சேருமாறும் அறிவுறுத்தப்பட்டது. 

டெலிகிராம் சேனல் மூலம் சேர்ந்த வர்மாவுக்கு, யூடியூப் சேனல்களுக்கு சந்தா செலுத்துவது போன்ற பணிகள் வழங்கப்பட்டது. அதன் பிறகு ரூ.5,000-ஐ வங்கி கணக்கில் டெபாசிட் செய்யும்படி அறிவித்துள்ளனர். இதனிடையில், தனது முதலீட்டிற்கு ரூ .6,440 திரும்பப் பெற்றதால், இது ஒரு மோசடி வேலை அல்ல என்று நினைத்துள்ளார். இந்நிலையில், தன்னை கங்கனா என்று அடையாளப்படுத்திக் கொண்ட ஒருவர் ரூ.1,00,000 செலுத்தினால் லாபத்தை திரும்பப் பெற அனுமதிக்கப்படுவதாகவும் அவரிடம் தெரிவிக்கப்பட்டது.  

மொத்தம் ரூ.11.45 லட்சம் தன்னிடம் மோசடி செய்ததாக வர்மா குற்றம் சாட்டியுள்ளார். அவரது புகாரின் அடிப்படையில், மானேசர் காவல் நிலையத்தின் சைபர் கிரைம் பிரிவில், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 406, 419 மற்றும் 420 ஆகியவற்றின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து காவல் துறை விசாரணையைத் துவங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com