
புதுதில்லி: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒரு நாள் பயணமாக நாளை (திங்கள்கிழமை) ஹரியாணாவில் உள்ள கர்னல் மற்றும் ஹிசார் ஆகிய மாநிலங்களுக்கு செல்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்னாலில் நடைபெறும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனத்தின் 19-ஆவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்கிறார். அதன் பிறகு ஹிசாரில், சவுத்ரி சரண் சிங் ஹரியானா வேளாண் பல்கலைக்கழகத்தின் 25வது பட்டமளிப்பு விழாவிலும் கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.