ராகுல் மேல்முறையீட்டு மனு: ஏப். 29-ல் விசாரணை

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறும் என குஜராத் நீதிமன்றம் அறிவித்துள்ளது. 
ராகுல் காந்தி (கோப்புப் படம்)
ராகுல் காந்தி (கோப்புப் படம்)

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறும் என குஜராத் நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

அவதூறு வழக்கில் ராகுலுக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தனை அடுத்து அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டுள்ளது. 

மோடி என்று பெயா் கொண்ட சமூகத்தினரை அவதூறாகப் பேசியதாக தொடுக்கப்பட்ட வழக்கில், ராகுல் காந்திக்கு குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதையடுத்து அவரை எம்.பி. பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்து மக்களவைச் செயலகம் நடவடிக்கை மேற்கொண்டது. இதனால் அவா் எம்.பி. பதவியை இழந்தாா்.

சூரத் மாஜிஸ்திரேட் நீதிமன்றத் தீா்ப்புக்கு எதிராக அங்குள்ள அமா்வு நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தாா். கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி அந்த மனுவை விசாரித்த அமா்வு நீதிமன்றம், ராகுலுக்கு வழங்கப்பட்ட தண்டனைக்குத் தடை விதிக்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக குஜராத் உயா்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை ஏப்ரல் 29-ஆம் தேதி நடைபெறும் என குஜராத் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com