
கோப்புப்படம்
உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக பெங்களூருவில் உள்ள ஹைகிரவுண்ட் காவல் நிலையத்தில் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறியதாவது,
இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகத்தில் மே 10-ம் தேதி பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தில் மதக்கலவரம், வன்முறை ஏற்படும் எனக் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார் அமித் ஷா. காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கக் கூடாது என வாக்காளர்களை மிரட்டும் முயற்சியும் நடந்துள்ளது.
நாட்டின் மிக உயர்ந்து பதவியில் இருக்கும் அமித் ஷா மாநில மக்களை அச்சுறுத்துவது தகுமா? இது என்ன ஜனநாயகம்? அவர் மீது ஐபிசியின் பல்வேறு பிரிவுகளின் கீழ் நாங்கள் புகார் அளித்துள்ளோம். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய உள்துறை அமைச்சர் ஷா, பாஜக தலைவர்கள் மற்றும் பாஜக பேரணி அமைப்பாளர்கள் மீது பல்வேறு சமூகத்தினரிடையே பகைமை மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிட்டதாகக் குற்றம்சாட்டி காவல்துறையில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...