மிசோரம் தேர்தலில் போட்டியிட நேர்மையானவர்களைத் தேடுகிறோம்: ஆம் ஆத்மி

மிசோரம் மாநிலத்தின் அனைத்துத் தொகுதியிலும் ஆம் ஆத்மி போட்டியிட உள்ளதாகவும், தேர்தலில் போட்டியிட நேர்மையானவர்களை தேடி வருவதாகவும் அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மிசோரம் தேர்தலில் போட்டியிட நேர்மையானவர்களைத் தேடுகிறோம்: ஆம் ஆத்மி

மிசோரம் மாநிலத்தின் அனைத்துத் தொகுதியிலும் ஆம் ஆத்மி போட்டியிட உள்ளதாகவும், தேர்தலில் போட்டியிட நேர்மையானவர்களை தேடி வருவதாகவும் அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, ஆம் ஆத்மியின் வடகிழக்கு மாநிலங்களின் பொறுப்பாளர் ராஜேஷ் சர்மா பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: நாங்கள் குற்றச் செயல்கள் மற்றும் ஊழலில் ஈடுபடாத நேர்மையானவர்களை வருகிற மிசோசரம் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளோம். மாநிலத்தின் அனைத்து தொகுதியிலும் போட்டியிட நாங்கள் நேர்மையானவர்களை தேடி வருகிறோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலற்ற ஆட்சியைத் தருவோம். மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என அரவிந்த் கேஜரிவால் நிரூபித்துள்ளார். தில்லி மற்றும் பஞ்சாபில் ஏற்பட்டுள்ள மாற்றம் மிசோரமிலும் ஏற்படும். கல்வி, மருத்துவம், சாலை வசதி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் ஊழலற்ற அரசு ஆகியவை எங்களது நோக்கம் என்றார்.

அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகின்றன. இம்மாத தொடக்கத்தில் தேர்தல் ஆணையம் ஆம் ஆத்மியினை தேசிய கட்சியாக அறிவித்தது. ஆம் ஆத்மி தற்போது தில்லி மற்றும் பஞ்சாபில் ஆட்சியில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com