
புணேவில் உள்ள தக்துஷேத் ஹல்வாய் கணபதி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு மேற்கொண்டார்.
தில்லிக்கு வந்த பிரதமர் மோடி புகழ்பெற்ற கணபதி கோயிலுக்கு வருகை தந்தார். இதையடுத்து அவருக்கு கோயில் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமராக பதவியேற்ற பின்னர், கணபதி கோயிலுக்கு வருவது இதுவே முதல்முறையாகும்.
கணபதி கோயில் அறக்கட்டளையால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. மாநிலத்தின் பணக்கார கோயில்களில் இதுவும் ஒன்றாகும். மேலும் மக்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் கோயிலாக இது திகழ்கிறது.
சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, என்சிபி தலைவர் சரத் பவார், முன்னாள் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் இக்கோயிலுக்கு வருகை தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.