
அகிலேஷ் யாதவ்
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பேரவை விதிகள் புத்தகம் குறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார்.
அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,
சட்டப்பேரவையில் மேலும் அறிமுகப்படுத்தக்கூடிய தீர்மானங்களை அவர் பட்டியலிட்டுள்ளார்.
அதில், தக்காளி சாப்பிட்டு சட்டப்பேரவைக்கு வரத் தடை விதிக்கலாம்.
சுற்றித்திரியும் காளைகளைப் பற்றிப் பேசுவதற்கு தடை விதிக்கலாம். பயிர்களை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு காளைகளால் ஏற்படும் தொல்லை பெரும் சிக்கலாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
பொது நலன் மற்றும் நல்லிணக்கம் பற்றிப் பேசுவதற்கு சட்டப்பேரவையில் தடை விதிக்கப்படலாம் என்றும் ஸ்மார்ட் நகரங்கள் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்து கேள்விகள் கேட்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
படிக்க: ராகுல் பறக்கவிட்ட முத்தம்: பாஜக பெண் எம்பிக்கள் புகார்!
மேலும், பணவீக்கம் மற்றும் வேலையில்லா திண்டாட்டம் குறித்து சட்டப்பேரவையில் பேச அனுமதிக்கப்பட மாட்டாது என்றும், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு கோரிக்கையை எழுப்ப யாருக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது.
மேலும், பிடிஏ பற்றிப் பேசுவது, பிச்சா, தலித், அல்பசங்க்யாக் ஆகிய சைகை மொழிகளுக்கும் கூட தடை விதிக்கப்படலாம் என்று அவர் பதிவிட்டுள்ளார்.