தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

திருமலை மலைப் பாதையில் தொடரும் சிறுத்தைகள் நடமாட்டம்: சிறுவா்,சிறுமியர் மலையேற அனுமதியில்லை!

பாதயாத்திரையாக செல்லும் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு மலை நடைபாதையில் 15 வயதுக்குட்பட்ட சிறுவா், சிறுமியர்களுக்கு அனுமதியில்லை

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 8:18 am IST

திருப்பதி: திருமலை மலைப் பாதைகளில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பாதயாத்திரையாக செல்லும் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு மலை நடைபாதையில் 15 வயதுக்குட்பட்ட சிறுவா், சிறுமியர்களுக்கு அனுமதியில்லை என நாளை முதல் புதிய கட்டுப்பாடுகளை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை மலைப் பாதையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வனவிலங்கிடம் சிக்கிய 6 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மற்றும் பக்தா்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மலையேறி பாதயாத்திரை செல்லும் குழந்தைகள் கையில், குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், தொலைபேசி எண், போலீஸ் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் ஆகிய விவரங்கள் அடங்கிய டோக்கனை கட்டி அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள். 

இந்த நிலையில், நாளை திங்கள்கிழமை முதல் சிறுவா், சிறுமியர்கள் பாதயாத்திரையாக மலையேறி செல்வதற்கு அனுமதி இல்லை என அறிவித்துள்ள திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகம், மேலும் சில முக்கிய கட்டுப்பாடுளை விதித்துள்ளது.

அதன்படி, திருமலைக்கு செல்லும் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் இனி 15 வயதுக்குட்பட்ட சிறுவா், சிறுமியர்களுக்கு அனுமதி இல்லை

இரு மலைபாதைகளிலும் காலை 6 முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இரு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படும். 

வனவிலங்குளின் நடமாட்டம் குறைந்து நிலைமை கட்டுப்பாட்டிற்குள் வரும் வரை, இந்த முடிவுகளும் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சனிக்கிழமை அலிப்பிரி வழி நடைபாதை, வாகனங்கள் செல்லும் சாலைகளில் சிறுத்தை, புலிகள் நடமாட்டத்தை தேவஸ்தான் நிர்வாகம் அடையாளம் கண்டுள்ளது. 

எனவே, திருப்பதி-திருமலை இடையே இருசக்கர வாகனங்களில் பயணிப்போர், பாதையாத்திரையாக செல்லும் பக்தர்கள் மிகவும் எச்சரிக்கையாகவும் கவனமாக செல்ல வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.