

தில்லியிலிருந்து புணே செல்லவிருந்த விஸ்தாரா விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விஸ்தாரா விமானம் புணே செல்லவிருந்த நிலையில், புறப்படத் தயாராகும்போது காலை 8.50- மணிக்கு விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசி அழைப்பு வந்தது.
அதைத்தொடர்ந்து, விமானத்திலிருந்த பயணிகள் கீழே இறக்கிவிடப்பட்டனர். அவர்களின் உடைமைகள் கீழே கொண்டு வரப்பட்டன. சம்பவ இடத்துக்கு தீயணைப்புத் துறையினர் மற்றும் வெடிகுண்டு செயலிழக்கும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, விமானத்தில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், அதில் சந்தேகப்படும்படி எந்த பொருளும் சிக்கவில்லை. காலை 8.50-க்கு கிளம்ப வேண்டிய விமானம், வெடிகுண்டு புரளி காரணமாக தாமதமாகப் புறப்பட்டது.
வழக்கமான நடைமுறைகள் முடித்து, அதிகாரிகள் எந்தவித தடையும் இல்லை என்று பாதுகாப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டதும் UK971 விமானம் தில்லியிலிருந்து புணேவுக்கு புறப்பட்டுச் சென்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.