அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும் இந்த ராசிக்கு: வாரப்பலன்கள்!

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஆகஸ்ட் 18 - 24 பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும் இந்த ராசிக்கு: வாரப்பலன்கள்!

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஆகஸ்ட் 18 - 24 பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

வருமானம் அதிகரித்து தலைநிமிர்ந்து நிற்பீர்கள்.  உறவினர்களிடம் இணக்கமாகப் பழகுவீர்கள்.  உயர்ந்தோரால் பாராட்டப்படுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும்.  வியாபாரிகளுக்கு கொடுக்கல்-வாங்கலில் இருந்த ஏற்றத் தாழ்வுகள் சீராகும். விவசாயிகள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பார்கள்.  

அரசியல்வாதிகள் வீண்சண்டைகளில் சிக்கிக் கொள்வார்கள். கலைத் துறையினர் தனித்திறமைகளை வெளிப்படுத்துவார்கள். பெண்கள்

பெற்றோர்களின் உடல் உபாதைகளுக்குத் தீர்வு காண உதவுவார்கள். மாணவர்கள் பெற்றோரின் அன்பைப் பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - ஆக. 24.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

வெளியூர் பயணங்களால் ஆதாயம் பெறுவீர்கள்.  தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.  பூர்விகச் சொத்துகள் கை வந்து சேரும்.  குழந்தைகளைப் பற்றிய கவலை குறையத் தொடங்கும்.

உத்தியோகஸ்தர்கள் சுறுசுறுப்புடன் பணியாற்றுவார்கள்.  வியாபாரிகளுக்குப் போட்டி குறையும். விவசாயிகள் புதிய நிலங்களை வாங்குவார்கள்.

அரசியல்வாதிகள் செய்முறைகளை மாற்றுவார்கள்.  கலைத் துறையினர் புதிய திறமைகளை வெளிப்படுத்துவார்கள்.  பெண்கள் கேளிக்கைகளில் பங்கேற்பார்கள். மாணவர்கள் உடல் உபாதைகளில் இருந்து விடுபடுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

தொழிலை அடுத்தநிலைக்கு இட்டுச் செல்வீர்கள். வருமானம் உயரக் காண்பீர்கள்.  பழைய கடன்களை அடைப்பீர்கள்.  இல்லத்தில் மழலைச் செல்வம் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள் புதிய நுட்பங்களைக் கற்பீர்கள். வியாபாரிகள் வருமானம் உயரக் காண்பார்கள்.  விவசாயிகளுக்கு பாசன செலவுகள் குறையும்.

அரசியல்வாதிகளுக்கு அனுகூலமான திருப்பம் உண்டாகும்.  கலைத் துறையினர் மரியாதையை உயர்த்திக் கொள்வார்கள்.

பெண்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியைக் காண்பார்கள். மாணவர்கள் சோம்பேறித் தனத்தைக் கைவிடுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

தொழில் முன்னேற்றம் உண்டாகும்.  அரசு சலுகைகள் கிடைக்கும்.  நவீன உபகரணங்களை வாங்குவீர்கள்.  வயிற்று உபாதைகள் தீரும்.

உத்தியோகஸ்தர்கள் குழப்பங்களைச் சந்திப்பார்கள்.  வியாபாரிகள் நல்ல லாபத்தைக் காண்பார்கள்.  விவசாயிகள் கால்நடை வளர்ப்பில் வருமானத்தைக் காண்பார்கள்.

அரசியல்வாதிகள் மனச்சோர்வின்றி பணியாற்றுவார்கள். கலைத்துறையினர் தாங்களே விளம்பரப்படுத்திக் கொள்வார்கள்.

பெண்கள் தேவையற்ற விவாதங்களிலிருந்து ஒதுங்கி இருப்பார்கள். மாணவர்கள் விளையாட்டில் ஈடுபடுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

புதிய சொத்துகளை வாங்குவீர்கள். தொழிலில் விழிப்புடன் செயல்படுவீர்கள். உடனிருப்போர் உதவி செய்வார்கள்.

உத்தியோகஸ்தர்கள் புதிய பணிக்கு முயற்சிப்பார்கள். வியாபாரிகள் போட்டிகளில் எச்சரிக்கையுடன் இருப்பார்கள். விவசாயிகள் உடனிருப்போருடன் பக்குவமாகப் பழகுவார்கள்.

அரசியல்வாதிகள்  வீண் அபவாதங்களை ஏற்றுக் கொள்ள நேரிடும். கலைத் துறையினர் கடன்களை அடைப்பீர்கள். பெண்கள் குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவார்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டில் வெற்றி பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
நீண்ட நாள் பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்கள்.  தன்னம்பிக்கை 
வளரும்.  உடல் ஆரோக்கியம் மேம்படும்.  உத்தியோகஸ்தர்கள் குறித்த காலத்துக்குள் பணிகளைச் செய்து முடிப்பீர்கள்.  வியாபாரிகள் கூட்டாளிகளுடன் இணக்கமாகப் பழகுவீர்கள்.  விவசாயிகள் தரமான விதைகளை வாங்கி விதைப்பார்கள். அரசியல்வாதிகள் மேலிடத்தின் கவனத்தை ஈர்க்கும் சந்தர்ப்பம் உண்டாகும். கலைத்துறையினர் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். பெண்கள் புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வார்கள். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை அள்ளுவார்கள்.
சந்திராஷ்டமம்}இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

இடையூறுகள் விலகுவதோடு, தொழிலும் விரிவடையும்.  உடனிருப்போருக்கு உதவுவீர்கள். கடன் வசூலாகும்.

உத்தியோகஸ்தர்கள் அக்கறையாக வேலை செய்து, மேலதிகாரிகளிடம் நற்பெயரை எடுப்பார்கள். வியாபாரிகள் புதிய திட்டங்களைத் தொடங்குவார்கள். விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் நன்றாக இருக்கும். 

அரசியல்வாதிகள் தொண்டர்களை ஊக்குவிப்பார்கள். கலைத்துறையினர் எதிரிகளைவிட்டு ஒதுங்குவார்கள். பெண்கள் குடும்பத்தில் நல்ல பெயரை எடுப்பார்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

சமுதாயத்தில் செல்வாக்கு உயரும். அதிர்ஷ்ட வாய்ப்புகளில் பணம் கை வந்து சேரும். நவீன வசதிகளுடன் கூடிய வீட்டுக்கு மாறுவீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணங்களைச் செய்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களின் தனித்திறமை அதிகரிக்கும். வியாபாரிகளின் கொள்முதல் லாபம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் எதிர்பாராத வளர்ச்சியைக் காண்பார்கள்.

கலைத்துறையினர் சிரமமின்றி வேலை செய்வார்கள். பெண்கள் பெற்றோருக்கு தேவையான உதவிகளைச் செய்வார்கள். மாணவர்கள் புதிய நண்பர்களைப் பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

நினைத்த காரியங்களை நிறைவேற்றுவீர்கள்.  உங்கள் வாக்குவலிமை கூடும். உங்களைப் புரிந்துகொள்ளாதவர்களிடம் இருந்து விலகுவீர்கள். உடனிருப்போரின் பிரச்னைகளைத் தீர்ததுவைப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றத்தைப் பெறுவார்கள். வியாபாரிகள் வருமானத்தை உயர்த்த யோசிப்பார்கள்.  விவசாயிகள் பாசன வசதிகளில் கவனம் செலுத்துவார்கள்.

அரசியல்வாதிகள் போட்டிகளைத் தகர்த்து வெற்றி பெறுவார்கள். கலைத்துறையினர் புகழடைவார்கள். பெண்களுக்கு மருத்துவச் செலவு குறையும். மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
புதிய பொறுப்புகளில் கவனத்துடன் ஈடுபடுவீர்கள். முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.  எதிர்ப்புகளைச் சமாளிப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் நற்பெயரை எடுப்பார்கள்.  வியாபாரிகள் கையிருப்புப் பொருள்கள் மீது அக்கறை காட்டுவார்கள்.  விவசாயிகள் கொள்முதலில் அதிக லாபத்தை ஈட்டுவார்கள்.

அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளில் விழிப்புடன் இருப்பீர்கள். கலைத்துறையினர் மறைந்துள்ள திறமைகளை வெளிப்படுத்துவார்கள். பெண்கள் தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவார்கள். மாணவர்கள் புதிய விஷயங்களைக் கற்பார்கள்.

சந்திராஷ்டமம் - ஆக. 18.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் மேன்மையைக் காண்பீர்கள்.  நெருக்கடி கொடுத்தவர்களே ஆதரிப்பார்கள்.  நன்னடத்தையால் குடும்பப் பாரம்பரியத்தைக் காப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் தைரியமாக மனம்விட்டு பேசுவார்கள். வியாபாரிகளுக்கு சிறிது சிரமம் ஏற்படும். விவசாயிகள் பூச்சிக்கொல்லிகளைத் தெளித்து பயிரைக் காப்பாற்றிக் கொள்வார்கள்.

அரசியல்வாதிகள் பிடிவாதக் குணத்தைத் தவிர்த்து,  பிறருடன் பழகுவார்கள். கலைத் துறையினருக்கு  வாய்ப்புகள் உண்டாகும்.  பெண்கள் கணவரோடு பாசத்துடன் இருப்பார்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டில் வெற்றி பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - ஆக. 19, 20, 21.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)


கொடுத்த வாக்கை காப்பீர்கள். தொழிலில் முன்னேற யோசிப்பீர்கள். சிலருக்கு வாய்ப்புகள் தேடி வரும். 

உத்தியோகஸ்தர்கள் வேலைகளைப் புரிந்துகொண்டு செயல்படுவார்கள். வியாபாரிகள் கூட்டாளிகளுடன் இணைந்து புதிய முயற்சிகளில் ஈடுபடுவார்கள். விவசாயிகள் திடீர் செலவுகளைச் சமாளித்துவிடுவார்கள்.

அரசியல்வாதிகள் செயல்களில் வெற்றிக்கொடி நாட்டுவார்கள். கலைத்துறையினர்  ரசிகர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வார்கள்.

பெண்கள் குடும்பப் பொருளாதாரம் உயரக்  காண்பார்கள். மாணவர்கள் வெற்றி மேல் வெற்றி பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - ஆக. 22,23.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com