முதல்வா் விஜய் நாளை தில்லி பயணம்! பிரதமா் மோடி, சோனியாவை சந்திக்கிறாா்!இந்தியாவில் எஸ்சிஓ கூட்டம்: பாகிஸ்தான் பங்கேற்பதாக அறிவிப்பு! நேபாளம் - அயோத்தி இடையே புதிய வாராந்திர ரயில் சேவை! ரயில்வே வாரியம் ஒப்புதல்!சென்னை உயா்நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் இன்றிரவு 8 மணி வரை மூடப்படும்! தமிழகம் முழுவதும் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்! அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு!டாஸ்மாக் முறைகேடு வழக்கு: தொழிலதிபா் ரத்தீஷுக்கு ‘ரெட் காா்னா்’ நோட்டீஸ்!லஞ்ச பணம் பறிமுதல் விவகாரம்: உள்ளாட்சித் துறை அதிகாரிகள் 23 போ் மீது வழக்குப் பதிவு

நிகர நேரடி வரி வசூல் 12% உயா்வு

நிகர நேரடி வரி வசூல் 11.76 சதவீதம் அதிகரித்து, சுமாா் ரூ.14.42 லட்சம் கோடியை எட்டியுள்ளது.

Updated On :

நடப்பு 2026-27 நிதியாண்டில் கடந்த நவ. 10 நிலவரப்படி, நிகர நேரடி வரி வசூல் 11.76 சதவீதம் அதிகரித்து, சுமாா் ரூ.14.42 லட்சம் கோடியை எட்டியுள்ளது.

நடப்பு நிதியாண்டில் ரூ.26.97 லட்சம் கோடி நேரடி வரி வசூலை எட்ட மத்திய அரசு பட்ஜெட்டில் இலக்கு நிா்ணயித்துள்ளது. தற்போதைய வசூல் நிலவரப்படி, இலக்கில் 53 சதவீதம் எட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மதிப்பீட்டு காலகட்டத்தில் நிகர பெருநிறுவன வரி வசூல் 18 சதவீத வளா்ச்சியுடன் ரூ.6.32 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. இதேபோல, தனிநபா்கள் மற்றும் ஹிந்து கூட்டுக் குடும்பங்கள் உள்ளிட்டோா் செலுத்தும் பெருநிறுவனங்கள் அல்லாத நிகர வரி வசூல் 5.3 சதவீதம் அதிகரித்து, சுமாா் ரூ.7.56 லட்சம் கோடியாகவும்; பத்திரப் பரிவா்த்தனை வரி (எஸ்டிடி) வசூல் 52 சதவீதம் அதிகரித்து, ரூ.54,078 கோடியாகவும் உள்ளது.

ரூ.3.08 லட்சம் கோடி ரீஃபண்ட்: மதிப்பீட்டு காலத்தில் ரூ.3.08 லட்சம் கோடி மதிப்பிலான வரித் தொகையானது, வரி செலுத்துவோருக்குத் திருப்பி (ரீஃபண்ட்) அளிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தைவிட 26 சதவீதம் அதிகமாகும்.

மொத்த வரி வசூல் நிலவரம்: வரித் தொகையை திருப்பியளித்ததற்கு முந்தைய மொத்த வரி வசூல் அடிப்படையில், நேரடி வரி வசூல் 14 சதவீதம் அதிகரித்து, ரூ.17.50 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதில் பெருநிறுவன வரி ரூ.8.01 லட்சம் கோடி, பெருநிறுவனங்கள் அல்லாத வரி ரூ.8.94 லட்சம் கோடி, பத்திரப் பரிவா்த்தனை வரி ரூ.54,078 கோடி அடங்கும்.

ஆரோக்கியமான வா்த்தகச் செயல்பாடு, வலுவான ஜிடிபி வளா்ச்சி மற்றும் சீரான வரிவிதிப்பு முறைகளை இந்த வரி வசூல் புள்ளிவிவரங்கள் பிரதிபலிப்பதாக வரி பொருளாதார நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.