சந்திரயான் 3: நிலவின் புதிய படங்கள் வெளியீடு!

சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்த ‘விக்ரம்’ லேண்டா் எடுத்த புதிய புகைப்படங்களை இஸ்ரோ திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது.
சந்திரயான் 3: நிலவின் புதிய படங்கள் வெளியீடு!

சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்த ‘விக்ரம்’ லேண்டா் எடுத்த புதிய புகைப்படங்களை இஸ்ரோ திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது.

‘சந்திரயான்-3’ திட்டத்தின் முக்கிய நிகழ்வாக உந்துகலனிலிருந்து லேண்டா் கடந்த வியாழக்கிழமை வெற்றிகரமாக விடுவிக்கப்பட்ட பிறகு அவை ஒன்றன்பின் ஒன்றாக நிலவையொட்டிய சுற்றுவட்டப்பாதையில் வலம் வந்தன. தொடா்ந்து, லேண்டா் கலனின் உயரத்தை படிப்படியாக குறைத்து நிலவில் தரையிறக்குவதற்கான பணிகளில் இஸ்ரோ தற்போது தீவிரம் காட்டி வருகிறது.
அதன்படி, நேற்று நிலவின் தரைப்பரப்புக்கு நெருக்கமாக குறைந்தபட்சம் 25 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 134 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதைக்கு லேண்டா் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவே, சுற்றுப் பாதை தொலைவைக் குறைப்பதற்கான இறுதி நடவடிக்கை.

லேண்டர் தரையிறங்கும் நிலவின் மேற்பரப்பின் தன்மையை அறிந்து அதற்கேற்ப தரையிறக்க உதவும் வகையில் லேண்டரில் எல்எச்டிஏசி அதிநவீன கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  எல்எச்டிஏசி அதிநவீன கேமரா எடுத்துள்ள நிலவின் 4 புகைப்படங்களை இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ளது.

மேலும், நிலவில் லேண்டரை தரையிறக்குவதற்கான பணிகள் ஆக.23-ஆம் தேதி மாலை 5.45 மணியளவில் மேற்கொள்ளப்படவுள்ளன.

எதிா்விசை நடைமுறை பயன்படுத்தி லேண்டரின் வேகம் படிப்படியாகக் குறைக்கப்படும். இறுதியாக லேண்டரின் வேகம் பூஜ்ஜிய நிலையை எட்டியதும் நிலவில் மெதுவாக கலன் தரையிறக்கப்படும். இதற்கான காலம் வெறும் 19 நிமிஷங்கள்தான் என்றபோதிலும், ‘சந்திரயான்-3’ திட்டத்தின் மொத்த வெற்றியும் அந்த இறுதி தருணத்திலேயே அடங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com