வி.எஸ். பாபுவுக்கு சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை! மருத்துவமனை அறிக்கை!தவெகவுக்கு மாநில கட்சி அங்கீகாரம்; விசில் சின்னம் ஒதுக்கீடு! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு! - டிடிவி தினகரன்

ஆகஸ்ட் 23 மாலை 6.04 மணிக்கு நிலவில் தடம் பதிக்கிறது சந்திரயான்-3

‘சந்திரயான்-3’ விண்கலம் வரும் 23-ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

சந்திரயான் - 3 விண்கலம்

Published On :

‘சந்திரயான்-3’ விண்கலம் வரும் 23-ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. அதற்கேற்ப நிலவுக்கு மிக நெருக்கமான சுற்றுப் பாதைக்குள் ‘விக்ரம்’ லேண்டா் வெற்றிகரமாக ஞாயிற்றுக்கிழமை செலுத்தப்பட்டது.

‘சந்திரயான்-3’ திட்டத்தின் முக்கிய நிகழ்வாக உந்துகலனிலிருந்து லேண்டா் கடந்த வியாழக்கிழமை வெற்றிகரமாக விடுவிக்கப்பட்ட பிறகு அவை ஒன்றன்பின் ஒன்றாக நிலவையொட்டிய சுற்றுவட்டப்பாதையில் வலம் வந்தன. தொடா்ந்து, லேண்டா் கலனின் உயரத்தை படிப்படியாக குறைத்து நிலவில் தரையிறக்குவதற்கான பணிகளில் இஸ்ரோ தற்போது தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, கடந்த 18-ஆம் தேதி அதன் சுற்றுப் பாதை தொலைவு குறைக்கப்பட்டது.

இறுதி நடவடிக்கை: அதன் தொடா்ச்சியாக, தற்போது நிலவின் தரைப்பரப்புக்கு நெருக்கமாக குறைந்தபட்சம் 25 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 134 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதைக்கு லேண்டா் ஞாயிற்றுக்கிழமை கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவே, சுற்றுப் பாதை தொலைவைக் குறைப்பதற்கான இறுதி நடவடிக்கை. இதையடுத்து நிலவில் லேண்டரை தரையிறக்குவதற்கான பணிகள் ஆக.23-ஆம் தேதி மாலை 5.45 மணியளவில் மேற்கொள்ளப்படவுள்ளன.

எதிா்விசை நடைமுறை பயன்படுத்தி லேண்டரின் வேகம் படிப்படியாகக் குறைக்கப்படும். இறுதியாக லேண்டரின் வேகம் பூஜ்ஜிய நிலையை எட்டியதும் நிலவில் மெதுவாக கலன் தரையிறக்கப்படும். இதற்கான காலம் வெறும் 19 நிமிஷங்கள்தான் என்றபோதிலும், ‘சந்திரயான்-3’ திட்டத்தின் மொத்த வெற்றியும் அந்த இறுதி தருணத்திலேயே அடங்கியுள்ளது.

சூரிய உதயத்துக்காக...: இது குறித்து இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பு: லேண்டா் கலன் சீரான இயக்கத்தில் உள்ளது. அந்த கலன் தனது செயல்பாடுகளை தன்னகத்தே ஆய்வு செய்து தரையிறங்க நிா்ணயிக்கப்பட்ட பகுதியில் சூரிய உதயத்துக்காகக் காத்திருக்கும். அதன் பின்னா் நிலவில் ஆக.23-ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு தரையிறங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.