
மலைக் கிராமத்துக்கு புதிய வழித்தட பேருந்து! மக்கள் அளவற்ற மகிழ்ச்சி!!
மலைக் கிராமத்துக்கு புதிய வழித்தட பேருந்து இயக்கப்பட்டதால் மக்கள் அளவற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பேருந்து - பிரதிப் படம்
வேலூர் மாவட்டத்தில் மலை கிராமத்திற்கு செல்லும் புதிய வழித்தட பேருந்து சேவையை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார். கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா கணியம்பாடி அடுத்த தெள்ளை கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
இந்த கிராமத்தில் இருந்து அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியில் செல்ல வேண்டும் என்றால் சுமார் 7 கிலோமீட்டர் தூரம் கடந்து தான் செல்ல வேண்டும்.
குறிப்பாக இந்த கிராம மக்கள் ரேஷன் பொருள்களை வாங்க நியாய விலைக் கடைக்கு நடந்துதான் சென்று வர வேண்டும். அதேபோன்று மருத்துவமனை மற்றும் பள்ளி மாணவர்கள் பள்ளிக்குச் செல்வது உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு இந்தக் கிராமத்தில் இருந்து நடந்து சென்று வந்துள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை முன்வைத்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தற்போது இந்த கிராம மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.
தள்ளை கிராமத்திற்கு புதிய வழித்தட பேருந்து சேவையை இன்று மாவட்ட ஆட்சியர் பி எஸ் லீலா அலெக்ஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேருந்தில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் மக்களுடன் மாவட்ட ஆட்சியர், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் மேலழகன் பயணித்தனர், அப்போது கிராம மக்கள் மகிழ்ச்சியாக மாவட்ட ஆட்சியரிடம் நன்றியை தெரிவித்தனர்.
எங்கள் கிராம மக்கள், வாழ்வாதாரத்துக்காக அருகில் உள்ள மாநில காப்பி தோட்டத்திற்கு பணிக்காக செல்லும் நிலையில் உள்ளது. எனவே எங்களுக்கு வாழ்வாதாரத்திற்கு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்தனர், மாவட்ட ஆட்சியர் நிச்சயம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





