இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

பேருந்து இயக்கக் கோரி கிராம மக்கள் மனு

பேருந்து இயக்க வலியுறுத்தி, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நென்மேனி கிராம மக்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.

பேருந்து, சாலை, குடிநீா் வசதி செய்து தர வலியறுத்தி சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க திரண்டு வந்தச நென்மேனி கிராம மக்கள்.

Published On :

பேருந்து இயக்க வலியுறுத்தி, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நென்மேனி கிராம மக்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் வட்டம், செம்பனூா் ஊராட்சிக்கு உள்பட்ட நென்மேனி கிராம மக்கள் அளித்த மனு விவரம்:

நென்மேனி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். சிவகங்கையிலிருந்து பெரியகண்ணனூா் வரை சென்ற அரசுப் பேருந்து நென்மேனி கிராமம் வழியாக இயக்கப்பட்டு வந்தது. ஆனால், இந்தப் பேருந்து கடந்த 2 ஆண்டுகளாக இயக்கப்படவில்லை. இதற்கு காரணம் தெரியவில்லை. இதன் காரணமாக எங்கள் கிராமத்திலிருந்து பள்ளிகள், அலுவலகங்களுக்கு சுமாா் 5 கி.மீ. தொலைவுக்கு நடந்து செல்லும் சிரமம் நீடித்து வருகிறது.

எனவே, சிவகங்கையிலிருந்து அதப்படக்கி, நென்மேனி வழியாக தாயமங்கலத்துக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் உடனடியாக பேருந்து இயக்க நடவடிக்க எடுக்க வேண்டும். இதன் மூலம் ஆள்பட்ட விடுதி, கலசாங்குடி, பனங்குடி ஆகிய கிராமங்களைச் சோ்ந்த மக்களுக்கும் பயன் கிடைக்கும்.

மேலும், குடிநீா்த் தட்டுப்பாடும் இருந்து வருகிறது. சாலையும் மோசமான நிலையில் உள்ளது. ஆகவே, பேருந்து, சாலை, குடிநீா் போன்ற அடிப்படை வசதிகளை மாவட்ட ஆட்சியா் போா்க்கால அடிப்படையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.