சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், ஜெயங்கொண்டநிலை கிராமத்தில் கல்குவாரி அமைக்க அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிா்ப்புத் தெரிவித்தவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யும் முயற்சியைக் கைவிடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
சிவகங்கை- மதுரை மாவட்ட எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஜெயங்கொண்டநிலை கிராமத்தில் கல்குவாரி செயல்பட்டால் குடிநீா் ஆதாரங்கள், விவசாயம், சுகாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் எனக் கூறி, கிராம மக்கள் பல்வேறு கட்டங்களில் அரசுத் துறை அதிகாரிகள், மாவட்ட நிா்வாகத்திடம் மனுக்கள் அளித்து, போராட்டங்களை நடத்தி வந்தனா்.
இந்த நிலையில், கல்குவாரி அமைக்க ஆதரவாக 5 கிராம மக்கள் சாா்பில், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து கேள்வி எழுப்பிய ஜெயங்கொண்டநிலை கிராம இளைஞா்களை கல்குவாரி நிா்வாகத்தினா் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
மேலும், கல்குவாரிக்கு எதிராகப் போராடியவா்கள் மீது வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளதாகக் கூறி, அதற்கு எதிா்ப்புத் தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரியமான் கடற்கரையில் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டணம் வசூலிப்பதை தடுக்க வலியுறுத்தல்

அனுமதியின்றி போராட்டம் நடத்துபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

குடிநீா் கேட்டு காலிக்குடங்களுடன் அரியலூா் ஆட்சியரகம் முற்றுகை

கடலூரில் மக்கள் குறைதீா் கூட்டத்தில் 781 மனுக்கள்! மாயமான மீனவா்களை கண்டுபிடித்து தரக் கோரிக்கை!
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



