மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுவி.எஸ். பாபுவுக்கு சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை! மருத்துவமனை அறிக்கை!தவெகவுக்கு மாநில கட்சி அங்கீகாரம்; விசில் சின்னம் ஒதுக்கீடு! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு! - டிடிவி தினகரன்

சாம்பியன்ஸ் லீக்: முதல் நாளில் 12 அணிகள் வெற்றி!

சாம்பியன்ஸ் லீக் 2026/27 சீசனின் முதல் நாளில் வென்ற 12 அணிகள் குறித்து...

Winners of the Man of the Match award in the Champions League.

சாம்பியன்ஸ் லீக்கில் ஆட்ட நாயகன் விருது வென்றவர்கள். - படங்கள்: எக்ஸ் / சாம்பியன்ஸ் லீக்

Published On :

சாம்பியன்ஸ் லீக் 2026/27 சீசனின் முதல் நாளில் 12 அணிகள் வென்றும் 12 அணிகள் தோல்வியையும் சந்தித்து இருக்கின்றன. இரண்டாம் நாள் போட்டிகள் அக்.14ஆம் தேதி நடைபெற இருக்கின்றன.

ஐரோப்பிய கண்டத்தில் நடைபெறும் கால்பந்து தொடரான சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் நேற்று (செப்.9) முதல் தொடங்கின. மொத்தம் 36 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் குரூப் ஸ்டேஜ் போட்டிகள் தொடங்கியுள்ளன.

சாம்பியன்ஸ் லீக்கின் முதல் போட்டியில் ஆஸ்டன் வில்லா 3-2 என என ப்ரக் அணியை வீழ்த்தியது. இந்த அணி 11, 22, 43ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து அசத்தியது.

பிரான்ஸில் நட்சத்திர அணியான நடப்பு சாம்பியன் பிஎஸ்ஜி அணி 6-1 என அபார வெற்றியைப் பெற்றது. அடுத்ததாக, ஸ்பெயினின் நட்சத்திர அணி பார்சிலோனா அணி 5-1 என அபார வெற்றியைப் பெற்றது.

பிரீமியர் லீக்கின் நடப்பு சாம்பியன் ஆர்செனல் அணி இத்தாலியின் நபோலி உடன் 1-0 என த்ரில் வெற்றி பெற்றது. எஇகே அணி 1-0 என எல்ஏஎஸ்கே அணியை வென்றது.

மான்செஸ்டர் சிட்டி 2-0 என போர்டோ அணியை வீழ்த்தியது. இதில் எர்லிங் ஹாலண்ட் இரண்டு கோல்களையும் அடித்து அசத்தினார்.

சாம்பியன்ஸ் லீக்கில் அதிகமுறை சாம்பியன் பட்டம் வென்ற ரியல் மாட்ரிட் அணி 2-1 என இன்டர் மிலனை வென்றது. டோர்ட்மென்ட் அணி 3-2 என வில்லா ரியலை வீழ்த்தியது.

ரியல் பெட்டிஸ் அணி 3-2 என லில்லி ஓஸ்சி அணியை வீழ்த்தியது. விஎஃப்பி ஸ்டட்கெர்ட் அணி 3-1 என வைகிங் அணியை வென்றது. லிவர்பூல் அணி 2-1 என அத்லெடிகோ மாட்ரிட்டை வீழ்த்தியது. எஸ்சிபி அணி 3-1 என கலதாசராய் அணியை வீழ்த்தியது.

சாம்பியன்ஸ் லீக் புள்ளிப் பட்டியல்

1. பிஎஸ்ஜி

2. பார்சிலோனா

3. எஸ்சிபி

4. விஎஃப்பி ஸ்டட்கெர்ட்

5. மான்செஸ்டர் சிட்டி

6. ஆஸ்டன் வில்லா

7. ரியல் பெட்டிஸ்

8. டோர்ட்மென்ட்

Summary

Champions League contenders PSG, Barcelona, Arsenal, Liverpool all start with wins

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.