
சாம்பியன்ஸ் லீக்கில் ஃபெர்ரன் டோரஸ் ஹாட்ரிக் கோல்..! நடப்பு சாம்பியன் பிஎஸ்ஜி அபாரம்!
சாம்பியன்ஸ் லீக்கில் பிஎஸ்ஜி அணி தனது முதல் ஆட்டத்தில் பெற்ற அபார வெற்றி குறித்து...

மூன்றாவது கோல் அடித்த மகிழ்ச்சியில் ஃபெர்ரன் டோரஸ். - படம்: ஏபி
சாம்பியன்ஸ் லீக்கில் நடப்பு சாம்பியன் பிஎஸ்ஜி அணி தனது முதல் ஆட்டத்தில் எஸ்கே ஸ்லோவன் பிராட்டிஸ்லாவா உடன் 6-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியுடன் புள்ளிப் பட்டியலில் பிஎஸ்ஜி அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது. சமீபத்திய லீக் போட்டிகளில் தோல்வியை சந்தித்து வந்த நிலையில், மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியிருக்கிறது.
இன்றைய சாம்பியன்ஸ் லீக்கில் ஆட்டத்தில் பிஎஸ்ஜி - ஸ்லோவன் பிராட்டிஸ்லாவா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 17, 23ஆவது நிமிஷங்களில் பெம்பேலெ கோல் அடித்தார்.
அடுத்ததாக புதியதாக அணியில் இணைந்த ஃபெர்ரன் டோரஸ் 31, 47, 57ஆவது நிமிஷங்களில் ஹாட்ரிக் கோல் அடித்து ஆச்சரியமளித்தார்.
கடைசியாக ஃபேபியன் ரூயிஸ் 88ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து அணியின் கோல் எண்ணிக்கையை 6ஆக உயர்த்தினார். எதிரணி சார்பில் 59ஆவது நிமிஷத்தில் ஓர் ஆறுதல் கோல் அடிக்கப்பட்டது.
இந்தப் போட்டியில் 68 சதவிகித நேரம் பந்தை தன்வசப்படுத்திய பிஎஸ்ஜி அணியினர் 725 முறை பந்தை பாஸ் செய்தத்தில் 93 சதவிகித துல்லியத்துடன் செயல்பட்டுள்ளார்கள்.
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கோல் அடித்த ஃபெர்ரன் டோரஸ் பிஎஸ்ஜி அணியில் சிறப்பாக விளையாடி வருகிறார். அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
1, 2, 3 â¡ï¸ MVP ð#UCL pic.twitter.com/5AnL7TRpDq
— Paris Saint-Germain (@PSG_inside) September 9, 2026
Summary
Ferran Torres scores a hat-trick in the Champions League! PSG secures a magnificent victory!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





