பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

பிஎஸ்ஜியை தோல்வியில் இருந்து மீட்ட உலகக் கோப்பை நாயகன் ஃபெர்ரன் டோரஸ்..! அறிமுக போட்டியில் 2 கோல்கள்!

பிஎஸ்ஜி அணியின் முதல் போட்டியிலேயே அசத்திய ஃபெர்ரன் டோரஸ் குறித்து...

Ferran Torres

ஃபெர்ரன் டோரஸ் - படம்: எக்ஸ் / பாரீஸ் செயின்ட் ஜெர்மன்

Published On :

பிஎஸ்ஜி (பாரீஸ் செயின்ட் ஜெர்மன்) அணிக்கான தனது முதல் அறிமுக போட்டியில் ஃபெர்ரன் டோரஸ் இரண்டு கோல்கள் அடித்து அசத்தினார். இருப்பினும் அந்த அணி 2-2 என போட்டியை சமனில் முடித்தது.

ஃபெர்ரன் டோரஸ் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கோல் அடித்து ஸ்பெயின் அணியை 1-0 என த்ரில் வெற்றி பெற செய்து ஆட்ட நாயகன் விருது வென்றார்.

இந்த அசத்தலான ஆட்டத்துக்குப் பிறகு பார்சிலோனா அணியில் இருந்து பிஎஸ்ஜி அணிக்கு மாறியுள்ளார். தொடர்ச்சியாக இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக்கை வென்றுள்ளது.

பிரான்ஸில் நடைபெறும் லீக்1 தொடரில் 2026-27 சீசன் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதில் பிஎஸ்ஜி அணி தனது முதல் போட்டியில் ரென்னீஸ் அணியுடன் மோதியது.

இந்தப் போட்டியில் 9, 38ஆவது நிமிஷங்களில் ரென்னீஸ் அணி கோல் அடித்து முதல் பாதியில் 2-0 என முன்னிலை வகித்தது. பின்னர், இரண்டாம் பாதியில் சப்ஸ்டியூட் வீரராக களமிறங்கிய ஃபெர்ரன் டோரஸ் 71, 82ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து சமன்படுத்தினார்.

பிஎஸ்ஜி அணிக்கான தனது அறிமுக போட்டியிலேயே ஆட்ட நாயகன் விருது வென்று நம்பிக்கை அளித்துள்ளார். மீண்டும் இந்த அணி லீக் 1, சாம்பியன்ஸ் லீக் வெல்ல இவர் உதவுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Summary

World Cup winner Ferran Torres does magic for PSG Debut

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.