லீக்ஸ் கோப்பை குரூப் சுற்று ஆட்டத்தில் லியோனல் மெஸ்ஸி (39 வயது) 2 கோல்கள், 1 அசிஸ்ட் செய்து ஆட்ட நாயகன் விருது வென்று அசத்தியுள்ளார்.
கால்பந்து உலகக் கோப்பைக்குப் பிறகு, மீண்டும் அமெரிக்காவுக்கு வந்திருக்கும் லியோனல் மெஸ்ஸி தனது இரண்டாவது போட்டியிலேயே ஆட்ட நாயகன் விருதை வென்று அசத்தியுள்ளார்.
லீக்ஸ் கோப்பை குரூப் சுற்று ஆட்டத்தில் இன்டர் மியாமி - சான் லூயிஸ் அணியும் இன்று அதிகாலை மோதின. இந்தப் போட்டியில் இன்டர் மியாமி 4-2 என வென்றது. இதில் லியோனல் மெஸ்ஸி 11, 44ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து அசத்தினார்.
முதல் பாதியின் ஸ்டாப்பேஜ் நேரத்தில் 45+7ஆவது நிமிஷத்தில் மெஸ்ஸி ஒரு அசிஸ்ட் செய்தும் அசத்தினார். இந்தச் சிறப்பான செயல்பாடுகளுக்காக மெஸ்ஸிக்கு ஆட்ட நாயகன் விருது தரப்பட்டது.
உலகக் கோப்பையிலும் அதிகமுறை ஆட்ட நாயகன் விருது வென்ற மெஸ்ஸி, மீண்டும் தனது ஆதிக்கத்தை நிறுவி வருகிறார். மொத்தமாக இதுவரை மெஸ்ஸி 921 கோல்கள், 419 அசிஸ்ட்டுகளை செய்துள்ளார்.
இந்தப் போட்டியில், மின்னல் காரணமாக இரண்டாம் பாதியில் ஆட்டம் 30 நிமிஷம் ஒத்திவைக்கப்பட்டது. 12 லீக்ஸ் கோப்பை போட்டிகளில் 14 கோல்கள் அடித்து, அதன் வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவர் என்ற சாதனை படைத்துள்ளார்.
முன்னதாக, லாஸ் ஏஞ்சலீஸ் அணியின் டெனிஸ் போகுவானா 13 கோல்களுடன் முதலிடத்தில் இருந்தார். தற்போது, இந்த சாதனையும் மெஸ்ஸியினால் முறியடிக்கப்பட்டுள்ளது.
லீக்ஸ் கோப்பையின் கடந்த சீசனில் இன்டர் மியாமி அணி இறுதிப் போட்டியில் 0-3 என தோல்வியுற்றது. அதில் லூயிஸ் சௌரஸ் ஒருவரை கடித்ததால் அவர் ஆறு போட்டிகளில் விளையாடமாட்டார் என தடை விதிக்கப்பட்டது. அதனால், இந்தாண்டு அவர் லீக்ஸ் கோப்பையில் பங்கேற்கமாட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
A little finishing, a little creation, a whole lotta Messi ð
— Leagues Cup (@LeaguesCup) August 6, 2026
Lionel Messi is your MOTM presented by GEICO ð¯ pic.twitter.com/W5sGeyrx86
Summary
Lionel Messi scores his first 2 goals since the World Cup as Inter Miami beats San Luis 4-2
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மெஸ்ஸி இல்லாமலேயே வென்ற இன்டர் மியாமி: எப்போது அமெரிக்கா திரும்புவார்?

அமெரிக்கா - ஆர்ஜென்டீனா: தனி விமானம் மூலம் சொந்த ஊருக்குச் சென்ற மெஸ்ஸி!

உலகக் கோப்பை: 5 போட்டிகளில் 4 ஆட்ட நாயகன் விருதுகள் வென்ற மெஸ்ஸி!

பல சாதனைகளுடன் ஆட்ட நாயகன் விருது வென்றார் மெஸ்ஸி!
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK




