ஸ்பெயினின் மாட்ரிட் காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி நிதி உதவி வழங்கியுள்ளார்.
மாட்ரிட் பகுதியில் கடந்த ஜூலை 10-23 முதல் அதிகபட்சமான வெப்ப அலையினால் பல இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. ஜூலை 24ல் 65 கி.மீ/ மணி வேகத்தில் காற்று வீசி இரண்டு தீ முகப்புகள் ஒன்றாக இணைந்து 50 கி.மீ/ மணி வேகத்தில் காட்டுத் தீயாக பரவியது.
இந்தக் கடுமையான காட்டுத்தீயினால் தேசிய அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. இதனால், 84,000 ஏக்கர் நிலப்பரப்பு கருகின. இந்தப் பாதிப்பினால் 56,500 பேர் கட்டாய இடம்பெயர்வுக்கு தள்ளப்பட்டனர்.
இந்தப் பகுதிகளில் 27,000 பேர் வீடுகளில் இருக்கும்படி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்தக் காட்டுத்தீயினால் பல்வேறு கட்டடங்களும் சேதமாகின.
இந்த நிலையில், மெஸ்ஸி 80,000 யூரோ (இந்திய மதிப்பில் 87.916 லட்சம்) நிவாரண நிதியாக அளித்துள்ளார். ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி (39 வயது) பார்சிலோனா அணியில் பல ஆண்டுகள் விளையாடியுள்ளார்.
ரியல் மாட்ரிட் அணிக்கும் பார்சிலோனா அணிக்கும் எப்போதுமே போட்டி இருக்கும். ஆனால், பகைமையைக் காட்டாமல் அவர் விளையாடாத பகுதிக்கும் நன்மை செய்துள்ளது பாராட்டைப் பெற்றுள்ளது.
தற்போது. மெஸ்ஸி அமெரிக்காவின் எம்எல்எஸ் தொடரில் இன்டர் மியாமி அணியில் விளையாடி வருகிறார். உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவரது அணி ஸ்பெயினிடம் தோல்வியுற்றது.
Heartbreaking scenes are emerging as a massive wildfire burns across the Madrid region of Spain. pic.twitter.com/7HQfcvM1fq
— Weather Monitor (@WeatherMonitors) July 25, 2026
Summary
Lionel Messi Donates 80,000 Euros For Madrid Wildfire Recovery
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மெஸ்ஸி எங்கள் கடவுள்: பாஜக அமைச்சரின் பேச்சு வைரல்!

லமின் யமால் உலகின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர்... மெஸ்ஸி புகழாரம்!

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |

7 போட்டிகளில் 5 ஆட்ட நாயகன் விருது வென்ற மெஸ்ஸி!
விடியோக்கள்
அறிமுகமாகும் பாலிமர் நோட்டுகள் | RBI | Sanjay Malhotra | Governor of the Reserve Bank of India




