
சிட்னி ஸ்வீனியின் நிர்வாண விளம்பரம்..! சமூக வலைதளத்தில் பெருகும் ஆதரவும் எதிர்ப்பும்!
ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனியின் நிர்வாண விளம்பரத்துக்கு பெருகும் ஆதரவும் எதிர்ப்பும் குறித்து...

சிட்னி ஸ்வீனியின் நிர்வாண விளம்பரம் - படங்கள்: எக்ஸ் / நோவிக்
அமெரிக்காவைச் சேர்ந்த ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனியின் (28 வயது) ஆபாச விளம்பரத்துக்கு சமூக வலைதளத்தில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
பிரபலமான ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனி பல படங்களில் நடித்திருந்தாலும் ‘யூபோரியா’ என்ற இணையத் தொடரின் மூலமாக உலக அளவில் புகழ்பெற்றார். தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
நடிகையாக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் மாடலாகவும் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், புதிய விளம்பரம் ஒன்றில் நிர்வாணமாக நடித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளன.
நோவிக் என்ற விளையாட்டு சார்ந்த பெட்டிங் நிறுவனத்துக்கு நடிகை சிட்னி ஸ்வீனி கால்பந்து, கூடைப் பந்து, பேஸ் பால், டென்னிஸ் பொருள்கள் உடன் நிர்வாணமாக இருக்கும் காட்சிகளில் நடித்துள்ளார்.
இந்தக் காட்சிகளுக்கு சமூக வலைதளத்தில் ஆதரவும் எதிர்ப்பும் அதிகரித்துள்ளது. சிலர் இந்த விளம்பரத்தை ‘புதுமையான முயற்சி’ என்றும் சிலர் ‘இதெல்லாம் ஏமாற்று வேலை’ என்றும் கூறி வருகிறார்கள்.
இது குறித்து நடிகை சிட்னி ஸ்வீனி, “எங்களது நோக்கம் ஒன்றுதான். கூச்சல்களை தவிர்த்துவிட்டு விளையாட்டு மீது கவனம் செலுத்துங்கள். இந்த விளம்பரம் கருத்துக்கு உயிரூட்டி நம்பிக்கையும் நகைச்சுவையும் விளையாட்டுத் தனத்துக்கான எல்லையையும் கொண்டு வந்துள்ளது.
இந்த செயலியைப் பயன்படுத்த அமெரிக்காவில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.
Confirmed: Sydney Sweeney knows ball. pic.twitter.com/EXQ4PzVZsi
— Novig (@Novig) September 9, 2026
Summary
Sydney Sweeney leaves little to the imagination in provocative new campaign
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




