ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டௌனி ஜூனியரருக்கு ’அவென்ஜர்ஸ்: டூம்ஸ் டே’ மற்றும் அவென்ஞ்சர்: சீக்ரெட் வார் என்ற திரைப்படங்களில் நடிக்க 100 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.957 கோடி) சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மார்வெல் சினிமெட்டிக் யுனிவர்ஸில் இறந்துவிட்டதாகக் காட்டப்பட்ட இவரது கதாபாத்திரம் மீண்டும் டாக்டர் டூம் என்ற வேறொரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதில் இவர் இந்தமுறை வில்லனாக நடித்துள்ளார்.
ஆங்கிலத் திரைப்பட நிறுவனமான மார்வெலின் மார்வெல் சினிமெட்டிக் யுனிவர்ஸில் அயர்ன் மேன் கதாபாத்திரத்தில் ராபர்ட் டௌனி ஜூனியர் நடித்து உலக அளவில் ரசிகர்களை வைத்திருக்கிறார். இந்த கதாபாத்திரத்தின் மூலம் அவரும் மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனமும் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.
அயர்ன் மேன் முதல் பாகத்தின் (2008) மூலம் மார்வெல் ஸ்டுடியோஸ் முதல்முறையாக அதிக லாபத்தை ஈட்டியது. தொடர்ந்து, மார்வெல் வெளியிட்ட அயர்ன் மேன் 2, அயர்ன் மேன் 3, அவென்ஜர்ஸ் 2012, அவென்ஜர்ஸ்: ஏஜ் ஆஃப் தி அல்ட்ரான், கேப்டன் அமெரிக்கா: சிவில் வார், ஸ்பைடர்மேன்: ஹோம்கமிங், அவென்ஜர்ஸ்: இன்ஃபினிட்டி வார் மற்றும் அவென்ஜர்ஸ்: எண்ட்கேம் என பல படங்களில் நடித்தார்.
இவர் நடித்த அனைத்து மார்வெல் படங்களும் அதிகளவிலான வசூலைக் குவித்தது. இருப்பினும், 2019-இல் வெளியான அவென்ஜர்ஸ்: எண்ட்கேம் படத்தில் ராபர்ட் டௌனி ஜூனியரின் அயர்ன் மேன் பாத்திரம் இறக்கும் வகையில் முடிவுக்கு கொண்டு வந்தனர். அதன்பின்னர் வெளியான அவெஞ்சர்ஸ் படங்கள் அதிகளவு வசூலைக் குவிக்க தவறின.
இந்த நிலையில், அவென்ஜர்ஸ்: டூம்ஸ் டேயில் ராபர்ட் டௌனி ஜூனியர் நடிக்கவிருப்பதாக, கடந்த ஜூலை 25ஆம் தேதியில் நடைபெற்ற சான் டைகோ காமிக் கான் நிகழ்ச்சியில் பங்கேற்ற மார்வெல் நிறுவனத்தின் தலைவர் கெவின் ஃபெயிஜ் அறிவித்தார்.
இந்தப் படம் வரும் டிச.18ஆம் தேதி உலகெங்கும் வெளியாக இருக்கிறது. அவெஞ்சர்ஸ் படங்களில் நடித்து மொத்தமாக இதுவரை ராபர்ட் டௌனி ஜூனியர் 500 மில்லியன் டாலருக்கு அதிகமாக சம்பாதித்துள்ளார்.
இந்த ’அவென்ஜர்ஸ்: டூம்ஸ் டே’ படத்தில் பெட்ரோ பாஸ்கல், பால் ரட், அந்தோனி மேக்கி, சிமு லியு, ஜேம்ஸ் மார்ஸ்டன், டேவிட் ஹார்பர், லெட்டிஷியா ரைட், லூயிஸ் புல்மேன், கெல்சி கிராமர், டேனி ரமிரெஸ், வின்ஸ்டன் டியூக், ஹன்னா ஜான்-கேமன், ரெபேக்கா ரோமிஜ்ன், டெனோச் ஹுயர்டா மெஜியா மற்றும் ஹெய்லி அட்வெல் ஆகியோர் நடித்துள்ளார்கள்.
அவென்ஞ்சர்: சீக்ரெட் வார் திரைப்படம் டிச.17, 2027ல் வெளியாகிறது. இந்தப் படத்திலும் டாக்டர் டூம் கதாபாத்திரத்தில் ராபர்ட் டௌனி ஜூனியர் நடித்துள்ளார்.
Summary
Robert Downey Jr.'s 'Avengers' salary revealed: Doctor Doom to take home $100 million for two superhero films
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வரலாறு படைக்கப்பட்டது... விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா புகழாரம்!

இறந்தும் வாழும் 5 ரூபாய் டாக்டர்! அவரது மகன் தொடரும் மக்கள் சேவை | Dr. Sarathraj | 5 Rupees doctor
அரசியலில் களமிறங்கும் ஜூனியர் என்டிஆர்?

நடிகர் ஜூனியர் என்டிஆர் - த்ரி விக்ரம் கூட்டணியில் புதிய திரைப்படம்!
விடியோக்கள்
கண்ணதாசன் கவிஞரான கதை| Kannadasan 100 | UN Kannan interview | Kaviyarasu|கண்ணதாசன் நூற்றாண்டு | EP -2




