டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 13 காசுகள் சரிந்து ரூ. 95.43 ஆக நிறைவு!சென்செக்ஸ் 388 புள்ளிகளுடனும், நிஃப்டி 24,500-க்குக் கீழே சரிவு!!பாலியல் குற்றச்சாட்டு! தில்லி கேபிடல்ஸ் வீரர் அபிஷேக் போரல் கைது!நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்! பாஜக மட்டும் எதிர்ப்பு!கர்நாடகத்துடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லதல்ல! ஓபிஎஸ் பேச்சுமுதல்வர் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்ற மாணவர்கள்!சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2400 உயர்வுதமிழ் மீதான தாக்குதல்.. அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!
/

திரைப்படத்தில் ஏஐ பயன்பாடு... ஆஸ்கர் நாயகன் பிராட் பிட் கூறியதென்ன?

ஆஸ்கர் வென்ற ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் ஏஐ குறித்து அளித்த பேட்டி குறித்து...

News image

ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் - AFP

Updated On :11 ஆகஸ்ட் 2026, 5:51 pm IST

ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் ஏஐ குறித்து அளித்த பேட்டியில், “ இடைநிலையான பட்ஜெட் படங்கள் உருவாக்க ஏஐ மிகவும் உதவிகரமாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் பிறந்த பிராட் பிட் (62 வயது) முப்பத்தைந்து ஆண்டுகளாக திரைத்துறையில் இருக்கிறார். அதில் அறுபதுக்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். ஃபைட் கிளப் படத்தின் மூலம் உலக அளவில் கவனம் பெற்றுள்ளார்.

செவன், தி டிபார்டட், இன்குளோரியஸ் பர்ஸ்டட், ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட் ஆகிய திரைப்படங்கள் உலக அளவில் அவருக்கு கூடுதலான ரசிகர்களைக் கொடுத்துள்ளது.

கடைசியாக இவர் நடிப்பில் எஃப் 1 படத்தில் நடித்திருந்தார். இந்தப் படமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் பிராட் பிட் அசத்தி வருகிறார்.

இரண்டு படங்கள் முடிவடைந்த நிலையில், புதிய படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். ஆஸ்கர் விருது வென்ற பிராட் பிட் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் ஏஐ குறித்து கூறியிருப்பதாவது:

ஏஐ குறித்து பலரும் அதிருப்தி அடைந்துள்ளார்கள். ஆனால், ஏஐ ஒரு கருவியாகப் பயன்படுத்தினால், அது மிகுந்த பயனுள்ளதாக அமையும். குறிப்பாக 40-90 மில்லியன் இடைநிலையான பட்ஜெட் படங்களை உருவாக்க மிகவும் உதவியாக இருக்கும்.

ஏஐ நம்மைப் போலவே நடிக்குமா என்பதற்கு யார் அதை உருவாக்குகிறார் என்பது முக்கியம். யார் அதற்குப் பின்னால் இருக்கிறார், யார் அந்தக் கதையைச் சொல்லுகிறார்கள் என்பதைப் பொறுத்துதான் அமையும்.

இந்த மாதிரியான உணர்வு வேண்டும் என யார் கேட்டுப் பெறுகிறார்களோ அவர்களைப் பொறுத்து மாறுபடும். அதனால், அவர்களால் ஒரு இறுதியான படைப்பை உருவாக்க முடியும். ஆனால், அது எனக்கு திருதியாக அமையாலும் போகலாம்.

ஏஐ ஸ்கேனர் மூலம் நம்மையே பிரதியெடுத்து வயதைக் குறைப்பது மற்றும் சண்டைக் காட்சிகளில் பயன்படுத்துகிறார்கள். நான் கடந்த இருபது ஆண்டுகளாக ஸ்கேன் செய்யப்பட்டு வருகிறேன்.

’நான் உருவாக்கியதால் நானே அழிப்பேன்’ என என்னுடைய ஒப்பந்தத்தில் இதைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன். ஏனெனில், நான் ஒரு பரனாயிட் (அதிகமான சந்தேகம் கொண்ட நபர்) ஒஜார்க் பையன்.

சமீபத்தில் நான் கேட்ட ஏஐ பாடல்கள் மிகவும் கவனம் ஈர்த்தன. மீண்டும் மீண்டும் அதனைக் கேட்க விரும்புகிறேன் என்றார்.

ஹார்ட் ஆஃப் பீஸ்ட் எனும் படத்தில் பிராட் பிட் நடித்துள்ளார். இதில் சிறப்புப் படை வீரராக நடித்துள்ளார்.

Summary

Brad Pitt says AI could help get more mid-budget films made

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.