ஒரு தந்தையின் மனம் இதற்கு மேல் எதையும் கேட்க முடியாது என தனது மகள் விஸ்மயா நடிகையாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் குறித்து நடிகர் மோகன் லால் பதிவிட்டுள்ளார்.
பிரபல மலையாள நடிகர் மோகன் லாலின் மகள் விஸ்மயா நடிகையாக அறிமுகமாகியுள்ள புதிய படம் “துடக்கம்”. இப்படத்தை, 2018 படத்தின் இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசஃப் இயக்கியுள்ளார்.
மோகன் லாலின் ஆசீர்வாத் சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ள “துடக்கம்” திரைப்படம் இன்று (ஆக. 7) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், துடக்கம் தயாரிப்பாளரும், நடிகை விஸ்மயாவின் தந்தையுமான மோகன் லால் இப்படத்துக்குக் கிடைத்துள்ள வரவேற்பு குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில்,
“ஒரு தந்தையின் மனம் இதற்கு மேல் எதையும் கேட்க முடியாது. துடக்கம் மூலம் விஸ்மயா அவரது பயணத்தைத் துவங்குவதும், நீங்கள் அவருக்கு காட்டும் அன்பைக் காண்பதும் நான் என்றுமே போற்றும் ஆசீர்வாதங்களாகும்.
சிறு வயது முதல் எனக்கு நன்கு அறிமுகமானவரும், நான் மிகவும் நேசிப்பவருமான ஆஷிஷ் ஜோ ஆண்டனி அவளுடன் இணைந்து இந்தப் பயணத்தை மேற்கொள்வது என் மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
அவர்கள் இருவரையும் இத்தனை அன்புடன் அரவணைத்து ஏற்றுக்கொண்டதற்கு நன்றி” எனக் கூறியுள்ளார்.
ஏற்கெனவே, மோகன் லாலின் மகன் பிரணவ் மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக உருவாகியுள்ள நிலையில், அவரது மகள் விஸ்வமயாவும் நடிகையாக அறிமுகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Mohanlal has posted about the film in which his daughter Vismaya has made her debut as an actress, stating that a father could ask for nothing more.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

15 நிமிஷங்களுக்கு மேல் மின்தடையா?: அதிகாரிகளுக்கு அமைச்சா் முக்கிய உத்தரவு

மோகன்லால் மகளின் துடக்கம் திரைப்பட டிரைலர்!

உயிரோடு இருக்கும் வரை இனி சேரப்போவதில்லை: ரவி மோகன்

சூர்யா - 47 படத்தின் பெயர் இன்னும் முடிவாகவில்லை: ஜித்து மாதவன்
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |


