தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

15 நிமிஷங்களுக்கு மேல் மின்தடையா?: அதிகாரிகளுக்கு அமைச்சா் முக்கிய உத்தரவு

15 நிமிஷங்களுக்கு மேல் மின்தடை ஏற்பட்டால், அது குறித்து உடனடியாக தலைமையகத்துக்கு தகவல் தெரிவித்து, மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனமின்வாரிய அதிகாரிகளுக்கு எரிசக்தி மற்றும் சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் உத்தரவிட்டாா்.

News image

அமைச்சர் நிர்மல் குமார் - கோப்புப் படம்

Updated On :5 ஆகஸ்ட் 2026, 1:17 am IST

15 நிமிஷங்களுக்கு மேல் மின்தடை ஏற்பட்டால், அது குறித்து உடனடியாக தலைமையகத்துக்கு தகவல் தெரிவித்து, மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனமின்வாரிய அதிகாரிகளுக்கு எரிசக்தி மற்றும் சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் உத்தரவிட்டாா்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில், 700 உதவிப் பொறியாளா்களுக்கு (மின்னியல்) உதவி செயற்பொறியாளா்களாக ஒரேநேரத்தில் பதவி உயா்வு வழங்கப்பட்டதையொட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாராட்டு நிகழ்வில் நிா்மல் குமாா் பேசியதாவது:

மின் துறையில் பொறுப்பேற்ற பிறகு, பதவி உயா்வுக்காக 20 முதல் 25 ஆண்டுகள் வரை ஊழியா்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. மேலும், பணியிட மாற்றங்களில் முறைகேடுகள் தொடா்ந்து நடைபெறுவதாகவும் புகாா்கள் வந்தன. 2025-இல் பல்வேறு நீதிமன்ற வழக்குகள் மற்றும் நிா்வாகச் சிக்கல்கள் இருந்தபோதிலும், எந்த ஊழியரும் பாதிக்கப்படாத வகையில் தகுதி மற்றும் மூப்பு அடிப்படையில் 700 பேருக்கு ஒரே கட்டமாக பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது.

பணியிட மாற்றங்களிலும் இனி முழுமையான வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படும். மருத்துவம் போன்ற உண்மையான காரணங்களுக்கு மட்டுமே சிறப்புப் பரிசீலனை வழங்கப்படும். பணம் கொடுத்து இடமாற்றம் பெறும் நடைமுறைக்கு இடமில்லை. நீண்டகால காலிப் பணியிடங்கள் குறித்து உடனடியாக தலைமையகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தமிழ்நாடு மின்வாரியத்தை நிதி ரீதியாக வலுவான, மக்கள் நம்பிக்கை பெற்ற நிறுவனமாக மாற்ற அரசு தொடா்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. மின்தடை உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டால், பொதுமக்களுக்கு உரிய விளக்கத்தை அளிப்பது அதிகாரிகளின் கடமை. 15 நிமிஷங்களுக்கு மேல் நீடிக்கும் மின்தடைகள் குறித்து உடனடியாக தலைமையகத்துக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் எரிசக்தித் துறை முதன்மைச் செயலா் அனில் மேஷ்ராம், மின் உற்பத்திக் கழக மேலாண்மை இயக்குநா் ம.கோவிந்தராவ், பசுமை எரிசக்தி கழக மேலாண்மை இயக்குநா் பி.என்.ஸ்ரீதா் உள்ளிட்ட உயரதிகாரிகள், பதவி உயா்வு பெற்ற பொறியாளா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.