ஆண்டுக்கு 2 பொதுத் தேர்வுகள்: மத்திய அரசு முடிவு!

11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

புதிய கல்வித் கொள்கையின் அடிப்படையில் வடிவமைக்கப்படும் 2024 பாட புத்தகங்கள், ஆண்டுக்கு இரண்டு முறை தேர்வு எழுதும் வகையில் மாற்றி அமைக்கப்படும் என்று தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு குழு தெரிவித்துள்ளது.

மாணவர்களின் புரிதல் மற்றும் திறனை மதிப்பீடு செய்யும் வகையில் நடத்தப்படும் இரண்டு பொதுத் தேர்வுகளில், எதில் அதிக மதிப்பெண்கள் எடுக்கிறார்களோ அதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 11, 12-ஆம் வகுப்பு மாணவர்கள் இரண்டு மொழிப் பாடங்களை படிக்க வேண்டுமென்றும், அதில் ஒன்று கட்டாயம் இந்திய மொழியாக இருக்க வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.