எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

தினமும் 10,000 அடிகள் நடந்தாக வேண்டுமா? மகிழ்ச்சியான புதிய தகவல்!

ஒரு நாளைக்கு 10,000 அடிகள் நடந்தால் மட்டுமே உடல் ஆரோக்கியமாக இருக்கும், நோய்களைத் தவிர்க்க முடியும் என்று கூறப்படுகிறது. இது உண்மையா?

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 8:23 am IST

ஒரு நாளைக்கு 10,000 அடிகள் (steps) நடந்தால் மட்டுமே உடல் ஆரோக்கியமாக இருக்கும், நோய்களைத் தவிர்க்க முடியும் என்று பரவலாகக் கூறப்படுகிறது.  இது உண்மையா? சரிதானா?

நாள்தோறும் மாறி வரும் இந்த நவீன காலத்தில் மக்களின் உணவு முறைகள், பழக்க வழக்கங்கள் வெகுவாக மாறிவிட்டன. இதனால் உடல்நலப் பிரச்னைகளும் அதிகரித்து வருகின்றன. சாதாரணமாக கண்ணுக்குத் தெரியாமல் ஏற்படும் உடல் பருமனால் நீரிழிவு நோய், இதயக்கோளாறுகள் என பல பிரச்னைகள் தொடர்ந்து வருகின்றன. 

இதற்காக உடல் ஆரோக்கியத்தை கவனத்தில் கொண்டு சத்தான உணவுகளை சாப்பிடுவதுடன் குறிப்பிட்ட வயதிற்கு மேல் அனைவரும் தினமும் நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் பலரும் பரிந்துரைக்கின்றனர். 

உடற்பயிற்சிகளில் நடைப்பயிற்சி என்பது மிகவும் எளிதான ஒன்று. அனைத்து வயதினரும் மேற்கொள்ளக்கூடியது.

அந்த வகையில் சிலர் நாள் ஒன்றுக்கு 4,000 முதல் 5,000 அடிகள் நடக்க வேண்டும் என்றும் சிலர் 10,000 அடிகள் வரை நடந்தால் மட்டுமே பலன் கிடைக்கும் என்றும் கூறி வருகின்றனர். உண்மை என்ன? 

Story image

நாள் ஒன்றுக்கு 10,000 அடிகள் என்பது முடிந்தவர்கள் செய்யலாம். ஆனால் ஒரு நாளைக்கு 4,000 அடிகள் நடப்பதே போதுமானது, அது உடல்நலம் தொடர்பான பிரச்னைகளால் ஏற்படும் மரண அபாயத்தைக் குறைக்கும் என்று ஐரோப்பிய ஜர்னல் ஆஃப் ப்ரிவென்டிவ் கார்டியாலஜி நடத்திய புதிய ஆய்வு கூறுகிறது. 

'10,000 அடிகள் நடப்பதால் சிறப்பு பலன்கள் என்று எதுவுமில்லை. மாறாக உடலில் கூடுதல் கலோரிகளை எரிக்க முடியும், உடல் மேலும் ஆரோக்கியமாக இருக்கும், அவ்வளவே. ஆனால், 4,000 அடிகள் நடப்பதே உடல் ஆரோக்கியத்திற்கு போதுமானது. வேண்டுமெனில் உங்களால முடிந்த அளவு ஒவ்வொரு 1,000 அடிகளாக அதிகரிக்கலாம், அப்போது உடல் ஆரோக்கியம் மேலும் 15% மேம்படும் என்று இந்த ஆய்வு கூறுகிறது. 

♦4,000 அடிகள் என்பது தோராயமாக 3 - 3.5 கி.மீ. தூரம்; 130-200 கலோரிகள் எரிக்கப்படுகிறது. 

♦4,000 அடிகள் என்பது தோராயமாக 8 -8.5 கி.மீ. தூரம்; 300- 500 கலோரிகள் எரிக்கப்படுகிறது. 

Story image

அதிகாலை நடைப்பயிற்சி

மேலும் நடைப்பயிற்சியை அதிகாலை மேற்கொள்வது கூடுதல் பலன்களை அளிக்கிறது. 

► உடலில் தேவையற்ற கொழுப்புகளை வேகமாக எரிக்கிறது. 

► மன அழுத்தத்தைக் குறைக்கிறது,

► ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

► உங்கள் ஆற்றலை அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க வைக்கிறது.

► சூரிய ஒளியில் இருந்து வைட்டமின் டி கிடைக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.