

கேரளத்தில் தந்தையுடன் ஏற்பட்ட தகராறில் 15 வயது சிறுவன் சுத்தியால் கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போத்தன்கோட்டில் தன் 15 வயது மகனை தந்தை கண்டித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், கோபத்தில் அருகிலிருந்த சுத்தியலால் தன் தந்தையை பலமுறை தலையில் அடித்துள்ளான்.
பின்னர், தந்தை மகனிடமிருந்து தப்பி வீட்டை விட்டு வெளியேறி அக்கம் பக்கத்தினரிடம் தகவல் கொடுத்தார்.
தந்தையை அடித்த கோபத்தில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்ற சிறுவனை அங்குள்ளவர்கள் காப்பாற்றினர். தற்போது இருவரும் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.