தனியாரிடம் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பராமரிப்பு பணிகள்!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பராமரிப்பு பணிகள், தனியாரிடம் ஒப்படைக்கவுள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பராமரிப்பு பணிகள், தனியாரிடம் ஒப்படைக்கவுள்ளது.

சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய புறநகா் பேருந்து நிலையம் கட்டும் பணி 2019 பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. சுமாா் 88 ஏக்கா் நிலத்தில் ரூ.400 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய பேருந்து நிலையத்தை திட்டமிட்டபடி 2 ஆண்டுகளில் முடித்து 2022-இல் திறக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கரோனா பரவல், ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் கட்டுமான பணியில் தாமதம் ஏற்பட்டது.

தற்போது இப்பணிகள் 99 சதவிகிதம் நிறைவடைந்து இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் கடந்த வாரத்தில் பெய்த கனமழையால், கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பகுதியில் வெள்ள நீர் தேங்கியது.

இதனை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு சிஎம்டிஏ அதிகாரிகள் ஈடுபட்டுள்ள நிலையில், மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெறும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

இந்த பேருந்து நிலையத்தில் 2,000 பேருந்துகள் வரை வந்து செல்லும் வகையிலும், 270 காா்கள் மற்றும் 3,500 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வகையிலும் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பேருந்து நிலையத்தில் பராமரிப்பு பணிகளை தனியாரிடம் கொடுக்கப்படும் என்று சிஎம்டிஏ தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள 105 கடைகளின் வாடகை, வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம், விளம்பரம் செய்வதற்கான கட்டணங்களை கொண்டு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

அவ்வப்போது சுத்தம் செய்து விமான நிலையத்தை போன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டாலும் வாகன நுழைவுக் கட்டணம், பேருந்து நிலைய உணவகங்களின் விலையை சிஎம்டிஏ அதிகாரிகள் கண்காணிப்பாளர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகின்ற தீபாவளி பண்டிகைக்குள் பேருந்து நிலையம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மழைநீர் வடிகால் பணிகளால் தள்ளிப்போகும் எனத் தெரிகின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com