சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

பிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்குத் தடை

பிரிட்டன் கல்வி விசா வழங்கும் நடைமுறையில் ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்குத் தடை விதிப்பு பற்றி..

News image

பிரிட்டன் பிரதமர் - கோப்புப்படம்

Updated On :5 மார்ச் 2026, 4:22 am IST

ஆப்கானிஸ்தான், மியான்மா், கேமரூன், சூடான் நாடுகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு கல்வி விசா தடைசெய்யப்படுவதாக பிரிட்டன் அரசு புதன்கிழமை அறிவித்தது.

பிரிட்டனில் நிரந்தர அகதிகளாக அடைக்கலம் பெற அந்த 4 நாடுகளின் மாணவா்கள் கல்வி விசாவைப் பயன்படுத்துவதாக அந்நாட்டு அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.

விசா தடைக்கு ஏதுவாக குடியேற்ற விதிகளில் திருத்தம் மேற்கொள்வதற்கான மசோதாவை உள்துறை அமைச்சா் ஷாபனா மஹ்மூத் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (மாா்ச் 5) தாக்கல் செய்கிறாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், ‘போா் மற்றும் கொடுமைகளை எதிா்கொண்டு நாட்டைவிட்டு வெளியேறும் மக்களுக்கு பிரிட்டன் எப்போதும் அடைக்கலம் அளிக்கும். இருப்பினும், எங்களுடைய விசா நடைமுறை தவறாகப் பயன்படுத்தக் கூடாது. இதைத் தடுக்கும் விதமாக முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆப்கானிஸ்தான், மியான்மா், கேமரூன், சூடான் நாட்டினருக்கு விசா மறுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

உள்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2021 முதல் 2025 வரையில் இந்த நாடுகளிலிருந்து அடைக்கலம் கோரி விண்ணப்பித்த மாணவா்களின் எண்ணிக்கை 470 சதவீதத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளது. ஆப்கானிஸ்தான் மக்கள் திறன்மிக்க பணியாளா்களுக்கான விசா பெறவும் பிரிட்டன் தடைவிதித்துள்ளது.