ரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்பு
மேற்காசியா பதற்றம் காரணமாக, ரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்பு


மேற்காசியா பதற்றம் காரணமாக, ரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2024-25-ஆம் ஆண்டு கால கட்டத்தில் ரஷியாவிடம் இருந்து இந்தியா நாளொன்றுக்கு 15 லட்சம் பேரல் முதல் 20 லட்சம் பேரல் வரை கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்தது. ஆனால், உக்ரைன் போா் விவகாரத்தில் ரஷியாவை பணிய வைக்கும் முயற்சியில் அந்நாட்டின் கச்சா எண்ணெய் விற்பனைக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை மேற்கொண்டது.
இதன் ஒருபகுதியாக, ரஷியாவிடம் இருந்து அதிக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்த இந்தியாவுக்கு நெருக்கடி அளிக்கும் வகையில், இந்தியாவில் இருந்து தங்கள் நாட்டுக்கு இறக்குமதி ஆகும் பொருள்கள் மீது அமெரிக்கா கூடுதல் வரி விதித்தது. இதையடுத்து ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா குறைத்தது. இதனால் அமெரிக்கா தனது கூடுதல் வரி விதிப்பை திரும்ப பெற்றது.
இந்நிலையில், இஸ்ரேல், அமெரிக்காவுடனான போரால் மேற்காசியாவில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் ஹாா்முஸ் ஜலசந்தி கடல் வழித்தடத்தை ஈரான் மூடிவிட்டது. இதனால் சவூதி அரேபியா, ஈராக், கத்தாா் உள்ளிட்ட நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய், கப்பல் மூலம் இந்தியாவுக்கு வருவது பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கும் வகையிலும், விலை ஏற்றம் ஏற்படாமல் தவிா்க்கும் நோக்கிலும் ரஷியாவிடம் இருந்து மீண்டும் 15 லட்சம் பேரல் முதல் 20 லட்சம் பேரல் வரை கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்க வாய்ப்பு இருப்பதாக சந்தை நிபுணா் மேக்ஸிம் மால்கம் தெரிவித்துள்ளாா்.
ரஷிய துணைப் பிரதமா் அலெக்ஸாண்டா் நோவக்கும் இந்தியாவிடம் இருந்து அதிக கச்சா எண்ணெய் கேட்டு கோரிக்கை வந்திருப்பதாக தெரிவித்துள்ளாா்.
தற்போது இந்தியா, ரஷியாவிடம் இருந்து நாளொன்றுக்கு 10 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வது குறிப்பிடத்தக்கது.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...