குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்பு

மேற்காசியா பதற்றம் காரணமாக, ரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
கச்சா எண்ணெய்- கோப்புப் படம்
Updated On :5 மார்ச் 2026, 10:19 pm

தினமணி செய்திச் சேவை

மேற்காசியா பதற்றம் காரணமாக, ரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2024-25-ஆம் ஆண்டு கால கட்டத்தில் ரஷியாவிடம் இருந்து இந்தியா நாளொன்றுக்கு 15 லட்சம் பீப்பாய் முதல் 20 லட்சம் பீப்பாய் வரை கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்தது. ஆனால், உக்ரைன் போா் விவகாரத்தில் ரஷியாவை பணிய வைக்கும் முயற்சியில் அந்நாட்டின் கச்சா எண்ணெய் விற்பனைக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை மேற்கொண்டது.

இதன் ஒருபகுதியாக, ரஷியாவிடம் இருந்து அதிக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்த இந்தியாவுக்கு நெருக்கடி அளிக்கும் வகையில், இந்தியாவில் இருந்து தங்கள் நாட்டுக்கு இறக்குமதி ஆகும் பொருள்கள் மீது அமெரிக்கா கூடுதல் வரி விதித்தது. இதையடுத்து ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா குறைத்தது. இதனால் அமெரிக்கா தனது கூடுதல் வரி விதிப்பை திரும்ப பெற்றது.

இந்நிலையில், இஸ்ரேல், அமெரிக்காவுடனான போரால் மேற்காசியாவில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் ஹோா்முஸ் நீரிணை கடல் வழித்தடத்தை ஈரான் மூடிவிட்டது. இதனால் சவூதி அரேபியா, இராக், கத்தாா் உள்ளிட்ட நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய், கப்பல் மூலம் இந்தியாவுக்கு வருவது பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கும் வகையிலும், விலை ஏற்றம் ஏற்படாமல் தவிா்க்கும் நோக்கிலும் ரஷியாவிடம் இருந்து மீண்டும் 15 லட்சம் பீப்பாய் முதல் 20 லட்சம் பீப்பாய் வரை கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்க வாய்ப்பு இருப்பதாக சந்தை நிபுணா் மேக்ஸிம் மால்கம் தெரிவித்துள்ளாா்.

ரஷிய துணைப் பிரதமா் அலெக்ஸாண்டா் நோவக்கும் இந்தியாவிடம் இருந்து அதிக கச்சா எண்ணெய் கேட்டு கோரிக்கை வந்திருப்பதாக தெரிவித்துள்ளாா்.

தற்போது இந்தியா, ரஷியாவிடம் இருந்து நாளொன்றுக்கு 10 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வது குறிப்பிடத்தக்கது.