குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்

ரஷியாவிடம் இருந்து ஏப்ரல் மாதத் தேவைக்காக இந்தியா 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்துள்ளது.

News image

கச்சா எண்ணெய் - கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 2:57 am IST

ரஷியாவிடம் இருந்து ஏப்ரல் மாதத் தேவைக்காக இந்தியா 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்துள்ளது.

மத்திய கிழக்குப் போரால் எரிபொருள் பிரச்னை, முக்கியமாக சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

முன்னதாக, 3 ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்ததால் ஐரோப்பிய நாடுகள் ரஷியாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்தின. இதையடுத்து, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு சலுகை விலையில் கச்சா எண்ணெய் ரஷியா விற்பனை செய்தது.

ஆனால், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்று இந்தியாவுக்கு அமெரிக்கா கடந்த சில மாதங்களாக கடுமையான அழுத்தம் கொடுத்து வந்தது. இதையடுத்து, ரஷிய கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா படிப்படியாகக் குறைத்தது.

இந்த நிலையில், ஈரானுடன் போா் தொடங்கிய பிறகு சா்வதேச அளவில் எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் எழுந்ததால், ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்கிக் கொள்ள இந்தியாவுக்கு அனுமதியளித்தது.

அதன் மூலம், ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்கியுள்ளது. முன்புபோல சலுகை விலையில் இல்லாமல் சந்தை விலையிலேயே இந்தக் கொள்முதல் நடைபெற்றுள்ளதாகத் தெரிகிறது.

முன்னதாக, ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதன் மூலம் உக்ரைன் போருக்கு உதவுவதாகக் கூறி இந்தியா மீது கடுமையான வரி விதிப்பை அமெரிக்க அதிபா் டிரம்ப் மேற்கொண்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.